விநாயகரை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது? முட்டுச்சந்தில் பிள்ளையார் வைப்பது ஏன் தெரியுமா?
சென்னை: வீட்டில் விநாயகர் சிலையை எப்படி போற்ற வேண்டும் தெரியுமா? முச்சந்தியில் விநாயகர் சிலைகளை வைப்பது ஏன் தெரியுமா?
மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரக்கூடியவர் விநாயகர். அந்தவகையில், வீட்டில் விநாயகர் சிலையை வைப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.. பெரிய சிலையோ, சிறிய சிலையோ, எதுவாக இருந்தால் விநாயகர் சிலையை வைப்பது வீட்டிற்கு நன்மைகளை பெற்றுத்தரக்கூடும் என்றே நம்பப்படுகிறது.

எனினும், வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கு சில விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.. உங்கள் வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தழைக்க வேண்டுமானால், விநாயகர் சிலையை வைக்கும்போது ஒருசில விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
வாஸ்து சாஸ்திரம்: அதன்படி, மாம்பழத்தோல் மற்றும் வேப்பங்கொட்டையால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாங்கி, வீட்டின் பிரதான நுழைவாயிலில் வைத்தால் மிகவும் நல்லதாம்.. ஆனால், விநாயகர் சிலையை வீட்டின் கதவுக்கு வெளியே வைக்க கூடாது.
அதேபோல வீட்டிற்குள் பணம் தங்கியிருக்க வேண்டுமானால், வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு வரவேண்டும். விநாயகப் பெருமானுடன் ஸ்படிக லட்சுமியை வழிபட்டால் செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும் உண்டாகும். உட்கார்ந்த நிலையிலுள்ள விநாயகர் சிலையை வீட்டிலும், நின்ற கோலத்தில் விநாயகர் சிலையை பணியிடங்களிலும் வைக்கலாம்..
சதுர்த்தி திதி: ஆனால் பிள்ளையாருக்கு ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 2 பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை, கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்கலாம்.
வீட்டின் வடகிழக்கு மூலை தான் விநாயகர் சிலை வைப்பதற்கான சரியான இடமாகும்... இந்த இடத்தில் பூஜை அறை இருந்தால் இன்னும் சிறப்பை தரும்.. ஒருவேளை வடகிழக்கு மூலையில் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், விநாயகர் சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறு இருக்கும்படி வைத்து வழிபட வேண்டும்...
விநாயகர் சிலை: வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்கலாம். ஆனால், தெற்கு திசையில் மட்டும் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது.. அதேபோல, படுக்கை அறையிலோ, கழிவறைக்கு அருகிலோ, குளியலறை சுவரோடு ஒட்டியிருக்கும்படியோ, அல்லது படிக்கட்டுக்கு கீழேயோ விநாயகர் சிலையை வைக்கக்கூடாது.
தீமைகளை அழித்து, செல்வத்தையும், முன்னேற்றத்தையும் தரக்கூடிய தெய்வமாக விநாயகர் கருதப்படுவதால்தான், முட்டுச்சந்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளையும், குடும்பத்தினரையும் தீய சக்திகளிலிருந்து பாதுகாக்க முட்டுச்சந்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்.
சமூக ஒற்றுமை: அதுமட்டுமல்ல, முட்டுச்சந்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு சமூக, பொருளாதார பின்னணிகளை கொண்டவர்களாக இருக்கலாம்... இப்படி முச்சந்தியில் விநாயகர் சிலையை வைத்து வழிபடும்போது, அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வழிபடக்கூடிய ஒரு பொதுவான இடமாக மாறுகிறது. இது சமூக ஒற்றுமையை வளர்க்க பேருதவி புரிகிறது.
முச்சந்தியில் சிலை வைப்பதற்கு முன்பு, அந்த பகுதியின் மக்களிடம் அனுமதி பெற வேண்டும்.. சிலை வைக்க போதுமான இடத்தினை உறுதி செய்து கொள்ள வேண்டும். விநாயகர் சிலை சுத்தமாகவும், நன்றாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications