தங்க நகை வாங்கப்போகிறீர்களா?.. மறந்தும் இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்..நகை சேர என்ன செய்ய வேண்டும்
சென்னை: தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. ஒரு சவரன் 5 ஆயிரம் விற்பனை செய்த போது இருந்த நகை கடைகளை விட இன்றைக்கு ஒரு சவரன் 50 ஆயிரம் விற்பனை செய்யும் போது உள்ள நகை கடைகள் அதிகமாக உள்ளது. தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. ஒரு கிராமில் இருந்து 10 சவரன் வரைக்கும் தங்க நகைகளை தேவைக்கேற்ப வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். தங்கம் இந்திய பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. திருமணத்தின் போது பெண்களுக்கு சீர் கொடுப்பது தொடங்கி பெண் குழந்தை பிறந்து விட்டால் தங்கம் அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்து விடுகிறது. நாம் வாங்கும் தங்கம் பல்கி பெருக வேண்டும். நம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். எந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கும் என்று பார்க்கலாம்.

வாங்கிய தங்கம் நிலையாக நம்முடனே இருக்க வேண்டும் என்றால் சனிக்கிழமை அன்று புதிதாக வாங்கிய நகைகளை அணிந்து கொள்வது சிறப்பு. சனிக்கிழமை தங்கம் வாங்கலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. சனிக்கிழமையில் கூட புதிதாக தங்க நகைகள் வாங்கலாம். சனி பெருக்கு என்று சொல்வது அதனால்தான். செவ்வாய்கிழமை எந்த பொருள் வாங்கினாலும் பல மடங்காக பெருகும் என்று சொல்வார்கள். எனவே மங்களகரமான மங்களவாரத்தில் தங்கம் வாங்கினாலும் அந்த தங்கம் நம்முடனேயே தங்கும்.
நகை கடைக்கு போய் விட்டோம் மாலையில் என்ன வாங்குவது என்று யோசிக்கிறீர்களா? மாலை 6 மணிக்கு மேல் சந்திர உதயமான பிறகு சந்திரனுக்கு சொந்தமான வெள்ளிப் பொருட்களை வாங்குவதன் மூலம் நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்
தங்கம் வாங்க நல்ல நாள்
பூசம் நட்சத்திர நாளில் தங்கம் வாங்கினால் அது நம்முடனேயே தங்கும் பூச நட்சத்திரம் அற்புதமான நட்சத்திரம். இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு குடுவை போலவும் குடம் போன்றும் இருக்கும். சில நேரங்களில் அம்பறாத்தூணி என்னும் அம்புகள் வைக்கும் கூடு போல் இருக்கும். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்த அமிர்த கலசம், இந்த கடகம் என்னும் ராசியில் இருக்கும் பூசம் எனும் நட்சத்திரத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது. தேவர்களின் குருவான பிரகஸ்பதியான குரு பகவான் பிறந்த நட்சத்திரம் இந்த பூசம் தான். தங்கம் தொடர்பான தொழில், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, பணம் புழங்கும் இடங்களில் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வேலை செய்வார்கள். பூசம் நட்சத்திரத்தில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பெருகும்.

இந்த ஆண்டு பூசம் நட்சத்திரம் பிப்ரவரி மாதம் 4, மார்ச் 3 மற்றும் 30, ஏப்ரல் 27, ஜூன் 20, ஜூலை 18, ஆகஸ்ட் 14, செப்டம்பர் 10, அக்டோபர் 7, நவம்பர் 4, டிசம்பர் 1 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வருவதால் இந்த நாட்களில் தங்கம் வாங்கிட அது பல மடங்காக பெருகும்.
அதே போல தங்க நகைகளை மார்ச் 22ஆம் தேதி உகாதி பண்டிகை நாளில் வாங்கலாம். ஏப்ரல் 22ஆம் தேதி அட்சய திருதியை நாளிலும் தங்கம், வெள்ளி நகைகள் பொருட்களை வாங்கலாம். அதே போல நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ள அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரைக்கும் தங்கம் வாங்க நல்ல நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல விஜயதசமி நாளாக அக்டோபர் 24ஆம் தேதி தங்கம் வாங்கலாம். நவம்பர் 10ஆம் தேதி தனத்திரயோதசி நாளிலும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாளில் தங்கம் வாங்க நம்முடனேயே தங்கும். நேரம் கெட்ட நேரத்தில் வாங்கும் தங்கம் நம் வீட்டில் தங்குவதில்லை வந்த சுவடு தெரியாமல் மாயமாகிவிடும்.

நாம் வாங்கும் தங்கத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். தங்கமோ, வெள்ளியோ எந்த பொருளென்றாலும் மதித்தால்தான் அது நம்முடன் தங்கும். நாம் அணியும் தங்க நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்கக் கூடாது. குறிப்பாக விளக்கு வைத்த நேரத்தில் தங்கத்தை கழற்றி தரக்கூடாது. அதே போல வெள்ளி, செவ்வாய் நாட்களிலும் நாம் அணியும் நகைகளை கழற்றக்கூடாது.
தங்கம் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் நகைகளை பற்களால் கடிக்கக் கூடாது. தங்க நகைகளை இரவல் கொடுத்தால் நம்முடைய ஐஸ்வர்யம் நம்மை விட்டு போய் விட வாய்ப்பு உள்ளது. தங்க நகை வாங்க சீட்டு கட்டினால் அதற்கு நகைகள்தான் வாங்க வேண்டும். அப்போதுதான் தங்க நகை மேலும் மேலும் சேரும்.
நகை விற்கும் விலையில் எப்படி வாங்குவது என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் தங்க நகை வாங்க வேண்டும் என்று நினைத்தாலே போதும் அதற்கான பணம் உங்களை தேடி வரும். பத்து சவரன் வாங்கா விட்டாலும் மாதம் 2 கிராம் வாங்கி சேமித்தாலே அதுவும் முதலீடுதான்.












Click it and Unblock the Notifications