எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் அதிர்ஷ்டம் அடிக்கும்? திருமலையின் பவர் என்ன?
திருப்பதி: குறிப்பிட்ட 9 லக்னங்களை கொண்ட ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் காத்திருக்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதுவும் எப்போதெல்லாம் போறாங்களோ அப்போதெல்லாம் லக்கி பிரைஸ்தான்!
திருப்பதிக்கு சென்றாலே திருப்பம்தான் ஏற்படும் என்பது முன்னோர்கள் சொலவடை! பக்தர்களுக்கு பெருமாள் வேண்டிய வரத்தை தருவார் என்பார்கள். அவர் கலியுக தெய்வமாகவும் காட்சியளிக்கிறார். திருப்பதி என்பது சந்திரனின் தாக்கம் அதிகமாக இருக்கும் மலை பகுதி.

இதனால்தான் திருப்பதியில் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. தேவஸ்தானத்திற்கு தெரியாத பெருமாளின் சொத்து மதிப்புகளும் ஏராளமாக இருக்கும் என்கிறார்கள். ஆனாலும் குபேரனிடம் வாங்கிய கடன் அடையவில்லை. அது வேற டிபார்ட்மென்ட்.
திருப்பதிக்கு சென்று வந்தாலே திருப்பம் என ஏன் சொல்கிறார்கள் என்றால் திருப்பதி மண்ணில் கால் எடுத்து வைத்தால் எந்தவிதமான தோஷங்கள் இருந்தாலும் அது நிவர்த்தியாகும். எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.
பிரபஞ்சத்தின் சக்தி நேரடியாக மலையில் ஈர்க்கப்படுவதால் பக்தர்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் வருகிறது. மனஉளைச்சலும் நீங்குகிறது. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் போது புத்துணர்ச்சியுடன் திரும்புகிறோம். திருப்பதி மலைக்கு நடந்து சென்றால் மிகவும் நல்லது. குறிப்பாக திங்கள்கிழமை அன்று திருப்பதியில் தங்கினால் அதிக பலன் கிடைக்கும்.
அந்த மலையில் ஒரு 10 மணி நேரமாவது நாம் இருந்தால்தான் முழு பலன் கிடைக்கும். பெருமாளை தரிசிக்க கூண்டுகளிலும் வரிசைகளிலும் காத்திருக்கும் போது பெருமாளை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு ஊர் கதை, உறவு கதையெல்லாம் பேசவே கூடாது. அங்கு போய் அமைதியாக இறைவனை எண்ணி தியானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
இனியாவது திருப்பதிக்கு சென்றால் கூண்டில் அடைத்துவிட்டார்களே என தேவஸ்தான நிர்வாகிகளை மனதிற்குள் கூட திட்டாதீர்கள். அதிலும் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களை கொண்ட ராசிக்காரர்கள் திருப்பதிக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தரிசனம் செய்யலாம்.
முடிந்தால் அங்கேயே வீடு எடுத்துக் கூட தங்கிக் கொள்ளலாம். இவர்கள் எப்போதெல்லாம் திருப்பதிக்கு செல்கிறார்களோ அப்போதெல்லாம் நிச்சயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அது போல் பணக்கஷ்டம் இருந்தால் திருப்பதிக்கு திங்கள்கிழமைகளில் சென்று வர வேண்டும் என்கிறார்கள். அது போல் வியாழக்கிழமைகளில் எளிய சேவையான பஞ்சகட்சம், துளசி மாலை அணிந்துள்ள பெருமாளை சந்தித்தால் கோடி புண்ணியம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications