இயேசுவை யார் உயிரோடே எழுப்பியது? உயிர்த்தெழுந்த பின்பு என்ன செய்தார்?
சென்னை: உலகத்தில் படைக்கப்பட்டதும், புதைக்கப்பட்டதுமான காரியங்களை குறித்து இன்றளவும் பல ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. எகிப்தில் புதைக்கப்பட்ட மம்மிஸ் சரீரங்களையும், ராட்சஷ டைனோசரின் எலும்பு துண்டுகள், இன்னும் பல்வேறு விஷயங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் ஒருவராலும், ஒருவர் மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்று ஒருவருடைய எந்த (Reminds) துண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், மரித்து உயிர்த்தெழுந்த இயேசு ஒருவர் மட்டும் தான். பூமியில் பல கோடிக்கணக்கான கல்லறைகள் உள்ளன, அதை ஆராய்ந்து பார்த்தால் அதின் அம்சங்கள் இருக்கும் அந்த மண்ணில். ஆனால் ஒரு கல்லறையில் மட்டும் தான் "அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது", அவர் வெறும் யாரும் இல்லை, மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து ஒருவரே.
கல்லறையின் வாயிலே புரட்டப்பட்ட கல்: இயேசு சிலுவையில் மரித்தபின்பு, கன்மலையில் வெட்டியிருந்த ஒரு புதிய கல்லறையில் வைத்து, யூத போர் சேவகரும் அங்கு காவலுக்கு வைக்கப்பட்டுயிருந்தனர். ஓய்வுநாள் (மூன்றாம் நாள்) அன்று அதிகாலையில் மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், மற்றும் சில ஸ்திரீகளும், சுகந்த வர்கம் வைப்பதற்காக கல்லறைகயை பார்க்க வந்தார்கள். அங்கே அவர்கள் இயேசுவுடைய கல்லறையில் கல் புரட்டப்பட்டு, அதின் மேல் தேவ தூதன் உட்காந்திருப்பதை கண்டார்கள். மத்தேயு (28:6) "அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" என்று தேவ தூதன் சொன்னதை கேட்டு மரியாள் மிகவும் பயந்து, இயேசுவின் சரீரத்தை கல்லறையில் இல்லை என்று கண்டபோது, அவர்கள் மிகவும் பயத்தோடும், மகிழ்ச்சியோடும், புறப்பட்டு சீஷர்களுக்கு அறிவிக்க போனார்கள்.

இயேசுவை யார் உயிரோடே எழுப்பியது? இயேசுவை உயிரோடே எழுப்பியது யார், அப்படிப்பட்ட வல்லமை எங்கேயிருந்து வந்தது? மனிதகுலத்தின் கீழ்படியாமையையும், பாவமும், பாவத்தின் சம்பளமாகிய மரணம் என்ற தண்டனையை, இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலமாய் பிதா தம்முடைய சித்தத்தை நிறைவேற்றி, பின்பு மூன்றாம் நாள் அவரே தமது வல்லமையை அனுப்பி இயேசு கிறிஸ்துவை உயிரோடே எழுப்பினர்.
உயிர்த்தெழுந்த பின்பு என்ன செய்தார்?: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, முதன் முதலில் மரியாளுக்கு தரிசமனார். பின்பு கல்லறையிலிருந்து வந்த பெண்களுக்கு தரிசனமானார். கல்லறைக்கு வந்த பெண்கள், தாங்கள் கண்டதை, சீஷர்களுக்கு அறிவித்தார்கள். இப்படியாக 40 நாட்கள் அளவும் தன்னுடைய சீஷர்களுக்கும், தன்னை பின்பற்றின அநேகருக்கும் தரிசனமாகி, அதில் சீஷர்களுக்கு தன்னுடைய பிரதான கட்டளைகளை பற்றி அவர்களுடனே பேசினார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது."நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு (உலகத்திற்கு) உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். கடைசியாக அவர் அப்போஸ்தலருக்கு தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பேசி, அநேக தெளிவான திருஷ்டசாங்கங்களினாலே அவர் உயிரோடே இருக்கிறவராக காண்பித்து, பின்பு பரம் ஏரி சென்றார். இயேசு உயிரோடே எழுந்ததினால் நம்முடைய அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் ஆத்துமாவிலே மரித்தவர்களாயிருந்த நம்மையும் உயிர்ப்பிப்பார் என்று விசுவாசிப்போமாக. ஆமென்












Click it and Unblock the Notifications