இயேசுவின் ரத்தம் ஏன் சிந்தப்பட்டது... ரத்தத்தினால் மனித குலத்திற்கு அருளிய பலன் என்ன?
சென்னை: இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தியது மட்டுமல்ல, 7 வெவ்வேறு இடங்களில் ரத்தம் சிந்தினார் என்பதை வேதாகமத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இயேசு ரத்தம் சிந்தி, அவருடைய ரத்தம் சிந்துதலை விசுவாசிப்பதினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்னவென்று பார்க்கலாம்.
அவர் சிலுவையில் ரத்தம் சிந்தி மரிப்பதற்கு மட்டுமல்ல, நமக்கு நித்திய வாழ்வைக் கொடுப்பதற்காகவும் பரத்திலிருந்து இறங்கி பூமிக்கு வந்தார்.

இயேசு கிறிஸ்துவின் ரத்தம், நமக்கு என்ன செய்கிறது: ரத்தம் சிந்துதல் இல்லாமல் மீட்பு இல்லை என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு சிலுவையில் சிந்தின ரத்தத்தின் நோக்கம், ஆதியிலே ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் நிமித்தம், இழந்த ஆசிர்வாதத்தை, மீண்டும் (Restoration) நம்மோடு இணைவதற்காக, சிலுவையில் அவருடைய ரத்தத்தை சிந்தினார் என்று பார்க்கிறோம். ஒவ்வொருவரின் உயிர் ரத்தத்தில் இருக்கிறது, இதை வேதாகமத்தில் (லேவியராகமம் 17:11) என்ற வசனத்தில், "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் (சிலுவையில்) உங்கள் ஆத்மாக்களுக்காகப் பாவநிவர்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன், ஆத்மாவிற்குப் பாவநிவர்தி செய்கிறது இந்த இரத்தமே" என்று சொல்லப்படுத்திருக்கிறது.
இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்டதின் நோக்கம்: இயேசுவினுடைய சிலுவை பாடுகள் தியானம் செய்யும்போது, மிக முக்கியமான காரியம், அவருடைய ரத்தம் நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்பட்டுயிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். இந்த ரத்தம் பாவங்களை மட்டும் மன்னிக்குமா அல்லது இன்றும் இன்றளவும் இந்த இரத்தத்திற்கு வல்லமை உள்ளதா என்ற கேள்விக்கு, (கொலேசியார் 1:20) ல், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள், பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்கு (பிதாவிற்கு) பிரியமாயிற்று என்று சொல்லியிருக்கிறபடியே, பாவமன்னிப்பு மட்டுமின்றி, தெய்வத்திற்கும் மனிதகுலத்தையும் இருதரதரையும் ஓப்புரவாகி, சமாதானத்தை உண்ணு பண்ணினார் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
ரத்தத்தின் உடன்படிக்கை மற்றும் பலன்கள்: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தப்பட்ட அவருடைய ரத்தத்தில் நம்மோடே உடன்படிக்கை (Promise) செய்து, என்றும் (அவருடைய ரத்தத்தின்) மூலமாய் பல ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது ஆழமான சத்தியம் மற்றும் சாத்தியமே. எப்படியெனில் நம்முடைய பாவங்களின் நிமித்தம் வருகிற பலவிதமான தீராத நோய்கள், குடும்ப சாபங்கள், வியாதிகள், பயம், பாரம், ஆகிய அனைத்தையும் மன்னித்து, கழுவி, இருதயத்தை சுத்திகரித்து, சமாதானத்தை தந்து, விடுதலையாக்குவதே இரத்தத்தின் பலனாய் இருக்கின்றது. இதை ஏசாயா 53:5 வசனத்தில், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று சொல்லப்பட்டியிருப்பதை பார்க்கலாம். எனவே அவருடைய ரத்தத்தின் வல்லமையும், தழும்புகளில் உள்ள வல்லமையையும் விசுவாசிக்கும்போது, அந்த சுகத்தை அல்லது விடுதலையை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது சத்தியம்.












Click it and Unblock the Notifications