Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கையை கொட்டிக்கொடுத்த பக்தர்கள்.. 2023ல் இத்தனை கோடியா?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் கடந்த 11 மாதங்களில் ரூ. 1274 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உண்டியலில் செலுத்திய காணிக்கை தொடர்பான விவரங்களை இன்றைய பிளாஷ் பேக் செய்தியில் பார்க்கலாம்.

திருப்பம் தரும் திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில நிமிட நேரம் தரிசனம் செய்தாலும் மன திருப்தியுடன் செல்கின்றனர் பக்தர்கள்.

Year ender 2023: Tirumala Tirupati Devasthanams hundial revenue 2023

பக்தர்கள் காணிக்கை: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். அம்பானி போன்றவர்கள் தங்கம் வைரம் என உண்டியலில் செலுத்துகின்றனர். அதே நேரத்தில் ஏழை நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற பணத்தை காணிக்கை செலுத்துகின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

கடன் வாங்கிய பெருமாள்: சீனிவாச பெருமாள் ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்வதற்காக குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்திருக்கிறார். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கொண்டே வட்டி கட்டுவதாக புராண கதை கூறுகின்றனர்.

ஏழுமலையானுக்கு காணிக்கை: 1950ஆம் ஆண்டு வரை ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது, ஆனால் 1958ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990 ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உண்டியல் வருமானம் வரத் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

கோடிக்கணக்கில் வருமானம்: கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியாகவும், 2011 ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியாகவும், 2012 ஜனவரி 1ஆம் தேதி ரூ.4.23 கோடியாகவும் இருந்தது. 2012 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.73 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி ரூ.6 கோடியைத் தாண்டியது.
கடந்த 2015-16ஆம் உண்டியல் ஆண்டு வருமானம் ரூ..1,000 கோடியைத் தாண்டியது. 2019-20- நிதி ஆண்டில் ரூ.1,313 கோடியை எட்டியது.

குறைந்த வருமானம்: கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கோவில் உண்டியல் வருமானம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்தது. 2020-21ல் நிதி ஆண்டில் ரூ.731 கோடியும், 2021-22ல் ரூ.933 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மீண்டும் கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதிக்கு வரத்தொடங்கியுள்ளது.

ரூ.1500 கோடி வருமானம்: கடந்த ஆண்டு அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.139.35 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தினர். ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.

காணிக்கை எவ்வளவு: 2023ஆம் ஆண்டு ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 123 கோடி ரூபாயும், பிப்ரவரி மாதம் 114 கோடி ரூபாயும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். மார்ச் மாதம் 120 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதம் 114 கோடி ரூபாயும், மே மாதம் 109 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. ஜூன் மாதம் 116 கோடி ரூபாயும், ஜூலை மாதம் 120 கோடி ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

குவியும் பக்தர்கள்: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 120 கோடியே 5 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏழுமலையானை கடந்த செப்டம்பர் மாதம் 21 லட்சம் பக்தர்கள் வழிபட்டனர். அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் 111 கோடியே 65 லட்சம் ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்தனர்.

உண்டியல் வருமானம்: கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் ரூ.108 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. திருப்பதியில் கடந்த நவம்பர் மாதம் கிடைத்த ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் ரூ.108 கோடி ஆகும். கடந்த நவம்பர் மாதம் 19.73 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட நிலையில் அவர்கள் கோவில் உண்டியலில் 108.46 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் இதுவரை மொத்தம் 1274 கோடி ரூபாய் இதுவரை வருமானமாக கிடைத்துள்ளது.

கொட்டிக்கொடுக்கும் பக்தர்கள்: திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தினசரியும் 4 முதல் 5 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி மட்டும் ஒரே நாளில் 7 கோடி 68 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இந்தத் தொகை தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ஏழுமலையானுக்கு கிடைத்த மிகப்பெரிய காணிக்கை தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கை எட்டுமா: டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள். இந்த மாதமும் 110 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1,320 கோடியை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 2023ஆம் ஆண்டில் 1400 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+