10 நிமிடத்தில் மனிதர்களையே டெலிவரி செய்யும் செயலி! ஆர்டர் செய்தால் மேஜிக்..ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு!
பெங்களூர்: இந்த காலத்தில் இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளே மிகப் பெரியளவில் ஹிட் அடித்து வருகிறது. இதற்கிடையே பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அதாவது ஆர்டர் செய்யும் பொருட்களை வெறும் 10 நாட்களில் டெலிவரி செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் நாம் எந்தவொரு விஷயத்தை ஆர்டர் செய்தாலும் அது வீடு தேடி வந்துவிடும். முதலில் அமேசான் உள்ளிட்ட தளங்களில் சில நாட்களில் பொருட்கள் வீட்டிற்கு வரும்.

ஆனால், இப்போது இன்ஸ்டட் டெலிவரி செயலிகள் அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்துள்ளது. ஜெப்டோ, இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட தளங்கள் மூலம் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் வெறும் 10 நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடும்.
மனிதர்கள் டெலிவரி:
பெங்களூரை சேர்ந்த ஈ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. அதாவது பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டாப்மேட் வெறும் 10 நிமிடத்தில் மனிதர்களை டெலிவரி செய்யவுள்ளதாக விளம்பரப்படுத்தி வருகிறது. ஏது மனிதர்களையா.. ஒன்னுமே புரியலையே எனக் குழம்பிப் போக வேண்டாம்.
மற்ற இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் எல்லாம் நீங்கள் ஆர்டர் செய்யும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும். ஆனால், இந்த டாப்மேட் உங்களை துறை ரீதியாக நிபுணத்துவம் பெற்றவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட அனுமதிக்கிறது. அதுவும் 10 நிமிடத்தில்.. இதன் மூலம் உங்களுக்கு எந்தவொரு சந்தேகம் ஏற்பட்டாலும் அதைத் தீர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு ஏரோஸ்பேஸ் குறித்து ஒரு சந்தேகம் என்றால் வெறும் 10 நிமிடத்தில் அத்துறையிலேயே நிபுணத்துவம் பெற்ற ஒருவரைத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.
10 நிமிடத்தில் மனிதர்கள் டெலிவரி:
இது தொடர்பாக டாப்மேட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவரான நிமிஷா சந்தா தனது ட்விட்டரில், "பிளிங்இட், ஜெப்டோ மற்றும் இன்ஸ்டாமார்ட் கதை ஓவர்.. ஏனென்றால், நாங்கள் 10 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை மட்டும் வழங்கவில்லை. மனிதர்களையே நேரடியாக வழங்குகிறோம். உங்கள் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும், உங்களைப் பிடித்த வேலையில் சேர உதவும் மனிதர்களை வழங்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
ட்விஸ்ட்:
ஆனால், எப்போது வேண்டுமானாலும் கனெக்ட் செய்ய முடியாதாம். இந்த தளம் மூலம் யூசர்கள் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வல்லுநர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தனிப்பட்ட ஆலோசனை, வழிகாட்டுதல்கள் என அனைத்தையும் பெறலாம். தற்போதே இந்த தளம் ஹிட் அடித்துவிட்டதாம். சுமார் 10 லட்சம் பேர் வரை இதை இப்போது பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
நிமிஷா சந்தா மேலும் கூறுகையில், "எங்கள் வல்லுநர்கள் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுகிறார்கள். இனிமேல் யூகித்து முடிவெடுக்கத் தேவையில்லை.. கூகுள் செய்து படிக்கத் தேவையில்லை. உங்களுக்குத் தேவையான எல்லா கேள்விகளுக்கும் 10 நிமிடத்தில் எங்கள் வல்லுநர்கள் பதிலளிப்பார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்:
இதற்கு இணையத்தில் பலவிதமான பதில்களைப் பார்க்க முடிகிறது. ஒரு தரப்பினர் இது தங்களுக்கு மிகப் பெரியளவில் உதவும் என குறிப்பிடுகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது ஏஜெண்டை அணுகும் சாதாரண முறை.. இதை விளம்பரப்படுத்த இதுபோல தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் எனப் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications