5ஜி செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு.. எப்போது அதிகம் வருகிறது! இது உயிருக்கு ஆபத்தா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இப்போது 5ஜி பயன்பாடு என்பது கணிசமாக அதிகரித்து வருகிறது. நமது நாட்டிலும் கூட பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை வந்துவிட்டது. இதற்கிடையே 5ஜி செல்போனில் இருந்து எந்தளவுக்குக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்பதைச் சர்வதேச ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இது குறித்து நாம் பார்க்கலாம்.

உலகெங்கும் இப்போது 5ஜி சேவை வேகமாக அதிகரித்து வருகிறது. நமது நாட்டிலும் கூட டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு 5ஜி சேவையை விரிவுபடுத்தி வருகிறது.

technology mobile

கதிர்வீச்சு

இதற்கிடையே ப்ராஜெக்ட் GOLIAT என்ற குழுவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக 5ஜி சாதனங்களில் இருந்து வரும் கதிர்வீச்சை ஆய்வு செய்துள்ளனர். உலகிலேயே நாடு முழுக்க 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து இருக்கும் நிலையில், செல்போன் கதிர்வீச்சு குறித்துக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருக்கும் சமயம், டவுன்லோட் செய்யும் போது, அப்லோட் செய்யும் போது என மூன்று சமயங்களிலும் அதன் கதிரியக்க அதிர்வெண் மின்காந்த புலம் (RF-EMF) எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் அளவிட்டு உள்ளனர். கிராம், நகரம் என நாடு முழுக்க 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

எவ்வளவு கதிர்வீச்சு

அதில் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருக்கும் பொது தான் கதிர்வீச்சு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. கிராமப்புறங்களில் சராசரி கதிர்வீச்சு ஒரு சதுர மீட்டருக்கு 0.17 மில்லிவாட்கள் (mW/m²) பதிவாகியுள்ளது.. அதேநேரம் நகர்ப்புறங்களில் இதன் சராசரி அதிகமாக 0.33 mW/m² முதல் 0.48 mW/m² வரை இருக்கிறது. அதாவது ஏரோபிளேன் மோடில் இருக்கும் போது சராசரியாகக் கிராமப்புறங்களில் கதிர்வீச்சு குறைவாக இருக்கிறது.

மறுபுறம் நாம் டேட்டோவை டவுன்லோட் செய்யும் கதிர்வீச்சு வெளிப்பாடு அதிகரிக்கிறது. அதாவது டவுன்லோட் செய்யும் போது 6-7 mW/m² ஆக அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுவும் கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களிலேயே அதிகமாக இருக்கிறது.

அப்லோட் செய்யும் போது அதிகம்:

ஆனால், அனைத்தையும் காட்டிலும் அப்லோட் செய்யும் போதே கதிர்வீச்சு அதிகமாக வெளிப்படுகிறது. குறிப்பாக அப்லோட் சமயத்தில் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களிலேயே கதிர்வீச்சு அதிகமாக இருக்கிறது. நகரங்களில் கதிர்வீச்சு சராசரியாக 16 mW/m² ஆக இருக்கும் நிலையில், கிராமங்களில் கிட்டதட்ட இரண்டு மடங்கு அதாவது 29 mW/m²ஆக உள்ளது.

மற்ற இரண்டில் நகரங்களிலேயே அதிகமாக இருக்கும் போது அப்லோட் சமயத்தில் மட்டும் ஏன் கிராமங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது என்ற சந்தேகம் வரும். அதற்கான பதிலையும் ஆய்வாளர்களே அளித்துள்ளனர். அதாவது சிக்னல்களை வெளியிடும் பேஸ் ஸ்டேஷன் அடர்த்தி குறைவாக இருப்பதால் செல்போன் அதிக சக்தியைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதனால் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள்.

உயிருக்கு ஆபத்தா:

இந்த ஆராய்ச்சி குழுவில் இருந்த அட்ரியானா பெர்னாண்டஸ் வேலுடோ இது தொடர்பாகக் கூறுகையில், "சோதனைகளில் செல்போன் குறிப்பிட்ட தூரத்தில் வைத்து அளவீடுகள் எடுக்கப்பட்டன. ஆனால், நாம் பொதுவாக செல்போனை மிக அருகே வைத்துப் பயன்படுத்துவோம். அப்போது இந்த அளவீடுகளைக் காட்டிலும் 10 மடங்கு வரை கதிர்வீச்சு அதிகமாக இருக்கலாம்" என்றார்.

அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது 5ஜி சேவையைப் பயன்படுத்தும் போது கதிர்வீச்சு அதிகரிக்கவே செய்கிறது. அதுவும் அப்லோட் செய்யும் போது அது அதிகமாக இருக்கிறது. அதேநேரம் இது சர்வதேச வல்லுநர்களின் பரிந்துரையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே உள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ICNIRP என்ற அமைப்பு 2,000 mW/m² வரை கதிர்வீச்சு பாதுகாப்பானது எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+