கை கொடுத்த AI.. இளைஞர் தூங்கும்போது சுற்றி சுற்றி உழைத்த ஏஐ! மறுநாளே வேலை தர முன்வந்த 50 கம்பெனிகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஏஐ என்பது இந்த காலத்தில் நமது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. அப்படி தான் இளைஞர் ஒருவர் வேலைக்குத் தானாக விண்ணப்பிக்கும்படி ஒரு ஏஐ போட்டை ரெடி செய்து வைத்துள்ளார். அப்படி ரெடி செய்து வைத்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இந்த நபருக்குக் கால் வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த நவீனக் காலத்தில் ஏஐ என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சாட்ஜிபிடி வருகை என்பது ஏஐ துறைக்கு ஒரு மிகப் பெரிய பூஸ்ட்டாக இருந்தது.

artificial intelligence ai

அதன் பிறகு பல்வேறு ஏஐ டூல்கள், ஏஐ சாட் போட்கள் வந்துவிட்டன. இது நமக்குப் பெரியளவில் உதவுவதாக உள்ளது. நாம் நினைத்துக் கூட பார்க்கவே முடியாத பல விஷயங்களை இந்த ஏஐ அசால்டாக செய்கிறது.

ஏஐ தொழில்நுட்பம்:

அப்படி தான் இங்கே இளைஞர் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார். இவர் ஏஐ தொழில்நுட்பத்தை யூஸ் செய்து தனது வேலை தேடும் முயற்சியை வேற லெவலுக்கு எடுத்துப் போய் இருக்கிறார். அதாவது தனது அடிப்படைத் தகவல்கள், படிப்புகள் உள்ளிட்ட ரெஸ்யூமிற்கு தேவையான தகவல்களை ஏஐ டூலுக்கு கொடுத்த அவர், வேலைக்கு விண்ணப்பிக்கும்படி ஏஐ போட்டை (AI bot) பிரோகிராம் செய்துள்ளார். இதை செட் செய்துவிட்டு அவர் தூங்கச் சென்றுவிட்டார்.

அவர் தூங்கிக்கொண்டு இருக்கும் போதே ஏஐ போட் அவருக்கு வேலை தேட ஆரம்பித்துவிட்டது. அதாவது ஒரே நேரத்தில் சுமார் 1000 வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் இதன் மூலம் சுமார் 50 வேலைகளின் நேர்காணலுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.

இது ஈஸியா இருக்கு:

இது தொடர்பான தகவல்களை அவர் தனது ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஏஐ போட்டை அவரே உருவாக்கியுள்ளார். வேலையின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ரெஸ்யூமை அதற்கேற்ப மாற்றி, ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பிக்கும்படி, ஏஐ போட்டை அவர் புரோகிராம் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதாவது கேள்வி எழுப்பினால்.. அதற்கான பதிலைக் கூட தானாக மின்னஞ்சலில் அனுப்பும்படி அவர் புரோகிராம் செய்துள்ளார்.

அந்த நபர் மேலும் கூறுகையில், "இப்போது ரெஸ்யூம்களை ஃபில்டர் செய்வதில் தானியங்கி முறையைத் தான் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. அந்த ஆடோமெடிக் ஸ்கிரீனிங் சிஸ்டம்களை கடந்து செல்ல இந்த முறை நம்பமுடியாத அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு வேலைக்கு என்ன தேவை என்பதைக் கருத்தில் கொண்டு ரெஸ்யூம்களை ஏஐ சாட் போட்கள் மாற்றி அமைக்கின்றன. இதன் மூலம் நமது ரெஸ்யூம் கவனிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒரே மாதத்தில் 50 கால்:

இவர் தூங்கிக் கொண்டு இருந்த போது இரவு முழுக்க வேலை குறித்த அறிவிப்புகளைப் படித்து, அதற்கு இந்த சாட் போட் அப்ளை செய்து வந்தது. காலையில் எழுந்து பார்க்கும் போது பல வேலைகளுக்கு இவரது ரெஸ்யூம் தேர்வாகி இருந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட வேலைக்கு இவருக்குக் கால் வந்துள்ளது. இதை பார்த்ததும் அவர் உற்சாகமடைந்தார்.

நெட்டிசன்கள்:

தனது இந்த அனுபவத்தை அவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரே மாதத்தில் இவருக்கு 50 நேர்காணல் அழைப்பு வந்ததைப் பார்த்து பலரும் வியந்துள்ளனர். இதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினாலும் கூட, சிலர் வரும் காலத்தில் எங்கு ஏஐ காரணமாக வேலைவாய்ப்பு பறிக்கப்படுமா என்ற அச்சத்திலும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+