அதிரடியில் இறங்கிய டிராய்.. இனி "டேட்டா + கால்" இரண்டிற்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
மும்பை: டேட்டா மற்றும் கால் என இரண்டையும் சேர்த்து உள்ள பேக்குகளை மட்டும் இத்தனை காலம் டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வந்தன. இருப்பினும், இதற்கு டிராய் எதிர்ப்பு தெரிவித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட நிலையில், ஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் டேட்டா மற்றும் கால் இரண்டுமே இருக்கும் வகையில் காம்போ ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே அளித்து வந்தன.

இதனால் டேட்டா தேவையில்லை என்று சொல்வோரும் அதற்கும் சேர்த்தே பணம் கட்ட வேண்டிய சூழல் இருந்து வந்தது. இது தொடர்பாகப் பலரும் புகார் அளித்த நிலையில், டிராய் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
டிராய் அதிரடி:
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையான டிராய் சமீபத்தில் மேஜர் வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதாவது டேட்டா + வாய்ஸ் கால் இரண்டும் ஒன்றாக உள்ளபடி மட்டும் ரீசார்ஜ் பேக்குகளை வழங்கக்கூடாது என்றும் தனித்தனி ரீசார்ஜ் பேக்குகளை டெலிகாம் நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்கி இருந்தது.
கட்டாயம் இல்லை:
அதாவது இனிமேல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டிற்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. எது தேவையோ அதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்! இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் இப்போது வாய்ஸ் காலுக்கு மட்டும் தனியாகவும் டேட்டாவுக்கு தனியாகவும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. உங்களுக்கு டேட்டா அல்லது வாய்ஸ் கால் இரண்டில் ஒன்று மட்டும் போதும் என்றால் அதற்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தவும் முடியும்.
புதிய திட்டங்கள்:
இதற்காக ஏர்டெல் நிறுவனம் ரூ.499க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் நமக்கு அன்லிமிடட் வாய்ஸ் கால் கிடைக்கும். மேலும், 900 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இதற்கான வெலிடிட்டி 84 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மேம்பர்ஷிப் மற்றும் ஏர்டெல் ஹலோ ட்யூன் ஆகிய சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பே இந்த திட்டம் ரூ.509 ஆக இருந்தது. ஆனால், அதில் 6ஜிபி டேட்டா கிடைக்கும்படி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 1959 ரூபாய்க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் அன்லிமிடட் வாய்ஸ் கால் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் நமக்குக் கிடைக்கும். மேலும், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மேம்பர்ஷிப்பும் இதில் கிடைக்கும். முன்பு இதே பேக் ரூ.1999க்கு 24 ஜிபி டேட்டாவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனம்:
எனக்கு பழையபடி டேட்டா உடன் சேர்த்து தான் வேண்டும் என்பவர்களுக்கும் அதற்கேற்ப பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் 7 ஜிபி டேட்டா, 900 எஸ்எம்எஸ்கள் இலவசமாகக் கிடைக்கும். வழக்கம் போல அப்பல்லோ மேம்பர்ஷிப், ஹலோ டியூன் இலவசமாகக் கிடைக்கும். இதன் விலை ரூ.548ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு பேக் விரும்புவோருக்கும் அதற்கேற்ப திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2249 மதிப்புள்ள இந்த பேக்கில் 30 ஜிபி டேட்டாவும் 3600 எஸ்எம்எஸ்களும் நமக்கு கிடைக்கும். அன்லிமடட் கால், அப்பல்லோ மேம்பர்ஷிப், ஹலோ டியூன் ஆகியவையும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications