ஐபோன்களுக்கு தடை விதிப்பேன்.. எலான் மஸ்க் மிரட்டல்.. அதிர்ந்த ஆப்பிள் நிறுவனம்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது தொலைத்தொடர்பு கருவிகளில் ஓபன் ஏ.ஐ -யை இணைத்தால், தனது கம்பெனிகளில் ஐபோன்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு வேகமாக வளர்ந்துவிட்டது. அதிலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வந்த பிறகு தொழில் நுட்ப உலகையே புரட்டி போட்டுவிட்டது எனலாம். உலகில் எங்குத் திரும்பினாலும் ஏஐ தான்..

உலகம் எப்படி இயங்குகிறது என்பதையே இந்த ஏஐ மொத்தமாக மாற்றும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே ஏஐ ஆய்வுகளுக்கு நிதியும் குவிகிறது. ஏஐ துறை இந்தளவுக்கு முக்கியத்தவம் பெற சாட் ஜிபிடி தான் முக்கிய காரணம்.. சாட் ஜிபிடியின் வெற்றி என்பது ஏஐ துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றே சொல்லலாம்.
ஏஐ தொழில் நுட்பம் மொத்தமாக டெக் உலகை ஆட்டி படைக்க தொடங்கியுள்ள நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்களில் சாட் ஜிபிடி தொழில் நுட்பத்தை அமல்படுத்தும் விதமாக ஏஐ தொழில் நுட்பத்தின் சில அம்சங்களை தனது செயலிகள் மற்றும் இயங்கு தளத்தில் கொண்டு வர இருப்பதாகவும் இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்தது.
இந்த நிலையில்தான், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்தால், ஐபோன்களுக்கு தனது அலுவலகத்தில் தடை விதிப்பேன் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளர். இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது இயங்கு தளம் (ஓஎஸ்) களில் ஓபன் ஏஐ-யை ஆப்பிள் நிறுவனம் இணைத்தால், ஆப்பிள் டிவைஸ்களுக்கு எனது கம்பெனிகளில் தடை விதிக்கப்படும்.
ஏனெனில், ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல் இதுவாகும். விசிட்டர்களும் அலுவலகத்திற்கு வரும் முன்பே அவர்களிடம் ஆப்பிள் கருவி இருக்கிறதா என சோதிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனமோ, ஓபன் ஏஐ நிறுவனமோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் உலக பெரும் பணக்காரருமான எலான்மஸ்க்கின் இந்த பதிவு ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடியை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications