"இது ரொம்ப மோசம்.." 6இல் ஒரு இந்தியர் ரீல்ஸ், ஷாட்ஸ் தினசரி 1.2 மணி நேரம் பார்க்கிறார்கள்
டெல்லி: இந்தியர்கள் ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்ற தளங்களுக்கு எந்தளவுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது குறித்து பகீர் ஆய்வு முடிவு இப்போது வெளியாகியுள்ளது.
இந்த டிஜிட்டல் காலத்தில் மொபைல் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறலாம். நம்மில் பெரும்பாலானோர் கணிசமான நேரத்தை மொபைல்களை பார்ப்பதிலேயே கணிக்கிறார்கள். இதனால் குடும்ப உறவுகளில் சிக்கல் தொடங்கிப் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதற்கிடையே இந்தியர்கள் எந்தளவுக்கு இணையத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் பகீர் ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
25 கோடி இந்தியர்கள்: நமது நாட்டில் சுமார் 25 கோடி பேர் Moj, Roposo உள்ளிட்ட ஷார்ட் வீடியோ தளத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் தளங்களைத் தவிர்த்தே இந்தளவுக்கு நமது இந்தியர்கள் வீடியோ தளங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்,
1.2 மணி நேரம்: சராசரியாக இந்தியப் பயனாளர்கள் தினசரி 1.2 மணி நேரம் வரை ஷார்ட் வீடியோ தளத்தில் நேரத்தைச் செலவழிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இதில் இருக்கும் பயனர்களில் 65-75% பேர் இரண்டாம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதாவது 10 கோடி பேர் இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து வருகிறார்கள்.
டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள ஷார்ட் வீடியோ தளங்கள் ஹிட் அடித்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆறு மாதங்களில் 58%க்கும் அதிகமானோர் கணிசமான நேரத்தை இதுபோன்ற தளங்களில் நேரத்தை செலவழிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
என்ன காரணம்: இதுபோன்ற தளங்களில் பிராந்திய மொழிகளில் உள்ளூர் கன்டென்ட்கள் அதிகம் இருப்பதே ஆய்வாளர்கள் இந்த தளங்களைப் பயன்படுத்த முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு ஜன.- ஆகஸ்ட் காலகட்டத்தில் ஒர்ஜினல் கன்டென்ட்கள் 92% வரை அதிகரித்தது. இதுவே இந்தாண்டு ஒர்ஜினல் கன்டென்ட்கள் 99% வரை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இவை ஒரு காரணம் என்றால் இதில் மற்றொரு விஷயமும் இருக்கவே செய்கிறது. அதாவது இந்த தளங்களை அவர்கள் மிகப் புத்திசாலித்தனமாக வடிவமைத்துள்ளனர். அதாவது பயனாளர்கள் தங்கள் தளங்களில் அதிக நேரம் செலவிடும் வகையில் அவர்கள் அந்த தளங்களை வடிவமைத்துள்ளனர். அதாவது பிடித்த கன்டென்ட்களை தொடர்ச்சியாகக் காட்டி, அதன் மூலம் பயனாளர்களை அதிக நேரம் தக்க வைக்கிறார்கள்.
நிறுவனங்கள் போடும் பிளான்: ஒரே கன்டென்ட்கள் திரும்பத் திரும்ப வராமல் இருப்பதும்.. கன்டென்ட்கள் புதிதாக இருப்பதும் தான் இதற்குக் காரணம். அதாவது நீங்கள் நாய் சேட்டை வீடியோ எதாவது லைக் செய்தால், அதேபோன்ற கன்டென்ட்கள் தான் திரும்ப திரும்ப காட்டும். இதுவே பயனாளர்கள் அதே தளங்களில் அதிக நேரம் இருக்கக் காரணமாகும். ஒவ்வொரு முறை ரிப்ரேஷ் செய்யும் போதும் புதிய வீடியோக்கள் வருவதையும் இந்த நிறுவனங்கள் உறுதி செய்கிறது.
இதற்காக அவர்கள் மெஷின் லேர்னிங் மற்றும் natural language processing ஆகிய அல்காரிதம்களைப் பயன்படுத்துகின்றனர். இவை நாம் இந்த தளங்களில் எதை விரும்பி பார்க்கிறோம், அதைப் பார்ப்பதில்லை. எதற்கு லைக் செய்கிறார்கள் என அனைத்தையும் நோட் செய்து கொள்ளும். அதன் அடிப்படையில் பயனாளர்களுக்கு கன்டென்ட்கள் சென்று சேர்வதை இவை உறுதி செய்கிறது. இதுவே இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் உள்ள மக்கள் இதுபோன்ற தளங்களுக்கு அடிமையாக இருக்கக் காரணமாக இருக்கிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications