ஒரு ரூபாய் கூட எக்ஸ்ட்ரா கட்ட வேண்டாம்! "இதை" செய்தால் ஐபிஎல் தொடரை ஹாட்ஸ்டாரில் இலவசமா பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க இந்தாண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என நேற்று ஜியோ அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது. இதற்கிடையே ஒரு ரூபாய் கூட ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவுக்கு செலுத்தாமல் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பானது. அதில் கட்டணம் செலுத்தாமல் அனைவரும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியாது. இதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

IPL 2025 Live Streaming How to Watch Indian Premier League for Free on Jio Hotstar

ஜியோ ஹாட்ஸ்டார்

தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள குறைந்தபட்ச பேக்கேஜ் என்றால் அது மொபைல் பிளான் தான். அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே ஐபிஎல் தொடரை இலவசமாகப் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் சோகமடைந்தனர். இதற்கிடையே ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒரு கலக்கல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்ப்பது எப்படி?

அதன்படி குறிப்பிட்ட சில பேக் ரீசார்ஜ் செய்தோம் என்றால் ஐபிஎல் தொடரை நம்மால் இலவசமாக ஜியோவில் பார்க்க முடியும். தனியாகச் சந்தா கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இது குறித்த அறிவிப்பை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக ஜியோ நிறுவனம் இரு சலுகைகளை அறிவித்துள்ளன. ஜியோ சிம் யூசர்களுக்கு ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ சிம் இல்லை என்றால் அவர்கள் புதிய சிம் வாங்க வேண்டும். அதற்கும் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜியோ சிம் வைத்திருப்போர் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தது ரூ.299க்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி ரீசார்ஜ் செய்தால் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியும். அட என்னப்பா நான் இப்போது தான் ரீசார்ஜ் செய்தேன் என்று நீங்கள் சொல்வது ஜியோவுக்கு கேட்டுவிட்டது போல! ஒருவேளை மார்ச் 17ம் தேதிக்கு முன்பு நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால் கூடுதலாக ரூ.100ஐ செலுத்தி இந்த சலுகையைப் பெற முடியும்.

புதிய ஜியோ சிம்

உங்களிடம் ஜியோ சிம் இல்லை என்றாலும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் புதிதாக ஒரு ஜியோ சிம்மை வாங்க வேண்டும். அதில் குறைந்தது ரூ.299 பேக் இருக்கும்படி வாங்க வேண்டும். இதை நீங்கள் செய்தாலே போதும் ஜியோ ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஐபிஎல் தொடரைப் பார்க்கலாம்.

இதில் நீங்கள் செல்போன் மட்டுமின்றி டிவியில் கூட பார்க்கலாம். அதுவும் 3கே குவாலிட்டியில் உங்களால் பார்க்க முடியும். மேலும், ஜியோ ஃபைபர் அல்லது ஏர் ஃபைபரையும் 50 நாட்கள் இலவசமாக டிரையலாக யூஸ் செய்து கொள்ளலாம். இதற்கு நாம் கூடுதலாகக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கவனிக்க வேண்டியவை

  • மார்ச் 17 முதல் மார்ச் 31க்குள் ஜியோ சிம்மை ரீசார்ஜ் செய்யுங்கள் அல்லது புதிய ஜியோ சிம் வாங்க வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள ஜியோ யூசர்கள் ரூ.299 அல்லது மேல் (தினசரி குறைந்தது 1.5 ஜிபி பேக்) ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
  • புதிதாக சிம் வாங்குவோர் குறைந்தது ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் சிம்மைப் வாங்க வேண்டும்
  • ஒருவேளை மார்ச் 17க்கு முன் நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால் 100 ஆட் ஆன் பேக் போட வேண்டும்.

இதுபோல ரீசார்ஜ் செய்வோருக்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா ஐபிஎல் போட்டி தொடங்கும் மார்ச் 22ம் தேதி ஆக்டிவேட் செய்யப்படும். அப்போது முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக நாம் ஜியோ ஹாட்ஸ்டாரை யூஸ் செய்து கொள்ளலாம்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+