"அந்த" மாதிரி காட்சிகளை கட் செய்து தூக்கும் ஜியோ ஹாட்ஸ்டார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! என்ன மேட்டர்
மும்பை: ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரு ஓடிடி தளங்கள் இப்போது ஒரே தளமாக ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் இணைந்துள்ளது. இதற்கிடையே இந்த ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் சத்தமின்றி ஒரு மாற்றம் நடந்து வருகிறது. இது சர்வதேச படங்களையும் வீடியோக்களையும் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமீப காலமாகவே நமது நாட்டில் ஓடிடி செயலிகளை மக்கள் பயன்படுத்துவது மெல்ல அதிகரித்தே வருகிறது. விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சியை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதால் ஓடிடிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

இணையச் சேவை மட்டும் இருந்தால் போதும் எப்போது வேண்டுமானாலும் ஓடிடியில் விரும்பிய நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அதிலும் சந்தா கட்டி உறுப்பினர் ஆனால், டவுன்லோட் செய்து இணையச் சேவை இல்லாத போதும் கூட பார்க்கலாம்.
ஜியோ ஹாட்ஸ்டார்
ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் சமீபத்தில் தான் இணைந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் டிஸ்னியின் அனைத்து படங்கள், சீரியல்களையும் பார்க்க முடியும். மேலும், என்பிசி யுனிவர்சல், பீகாக், வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி, ஹெச்பிஓ மற்றும் பாரமவுண்ட் நிறுவனங்களின் படங்கள் மற்றும் சீரியஸ்களை பார்க்கும் வகையில் இருந்தது. இனி தனித்தனியாகக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதால் இரு பெரும் ஓடிடிக்கள் இணைவது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தச் சூழலில் தான் இப்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் நடக்கும் மாற்றம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இத்தனை காலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சர்வதேச படங்கள் மற்றும் சீரியஸ்கள் தனியாக இந்தியாவுக்கு சென்சார் செய்யப்படாது. இதனால் அந்தரங்க காட்சிகள், நிர்வாண காட்சிகள், அதீத வன்முறை என அனைத்தும் அப்படியே இருக்கும்.
ரசிகர்கள் அதிர்ச்சி
ஆனால், ஜியோவுடன் இணைந்த பிறகு அதைக் கட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹாட்ஸ்டாரில் இப்போது ரிலீஸான ஒயிட் லோட்டஸ் சீரிஸின் புதிய எபிசோட் இந்தியாவுக்கு ஏற்றபடி தனியாக டிரிம் செய்யப்பட்டுள்ளது. இனி புதிதாக ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அனைத்து சர்வதேச படங்கள் மற்றும் சீரியஸ்களில் இதேபோல வீடியோக்கள் கட் செய்யப்படும் என்றே தெரிகிறது. இதுவே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் ஏற்கனவே ஓடிடி தத்தில் உள்ள படங்களில் உள்ள காட்சிகளை இதேபோல சென்சார் செய்ய திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
பின்னணி
கடந்தாண்டு வரை நமது நாட்டில் முக்கியமான ஓடிடி தளங்களில் ஒன்றாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இருந்தது. இருப்பினும், திடீரென சர்வதேச அளவில் டிஸ்னிக்கு ஏற்பட்ட சில பொருளாதார சிக்கல்கள் இருந்தன. இந்தியாவிலும் கூட ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஓடிடி உரிமங்கள் போனதால் ஹாட்ஸ்டார் திண்டாடத் தொடங்கியது. இதையடுத்து இந்தியாவில் ஜியோவுடன் இணைந்து பணியாற்ற டிஸ்னி ஒப்பந்தம் போட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் இறுதியானது.
ஜியோ சினிமாஸை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம் என அறிவித்தால் ஒட்டுமொத்தமாக யூசர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஜியோ சினிமாஸை கட்டணம் செலுத்திப் பார்ப்போர் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், அந்த சிக்கலை இந்த இணைப்பு தீர்ப்பதாக இருக்கிறது.
ஜியோ ஹாட்ஸ்டார்
ஜியோ ஹாட்ஸ்டார் இப்போது 3 பிளான்களை வழங்குகிறது. முதலில் உள்ள மொபைல் பிளானில் ஒரு நேரத்தில் ஒரு செல்போனில் மட்டும் ஹியோ ஹாட்ஸ்டாரை பயன்படுத்த முடியும். அதிகபட்சம் 720pல் வீடியோக்களை பார்க்கலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.499ஐ கட்ட வேண்டும். அடுத்து சூப்பர் பிளானில் ஒரு நேரத்தில் இரு கருவிகளில் வீடியோ பார்க்கலாம். இதற்கு ஆண்டுக்கு என்றால் ரூ.899 கட்ட வேண்டும். அடுத்து பிரீமியம். இதில் 4K தரத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 8 கருவிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் ஆண்டுக்கு ரூ. 1499 கட்ட வேண்டும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications