உலக செல்போன் வரலாற்றிலேயே முதல் முறை.. சாம்சங் மொபைலில் வருகிறது 440 MP கேமரா
சென்னை: ஒவ்வொரு மொபைல் போனுக்கும் கேமராதான் கெத்து. கேமரா எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த போனை மக்கள் விரும்புவார்கள். இந்நிலையில் மார்க்கெட்டில் முதன் முறையாக 440 MP கேமராவை கொண்ட மொபைலை சாம்சங் களமிறக்குகிறது.
செல்போன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த செல்போனில் அதிக மெகா பிக்ஸல்(MP) கேமரா இருக்கிறதோ அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஒவ்வொரு இளைஞனும் ஆசை கொண்டிருந்தான். தொடக்கத்தில் வெறும் 2 MP கேமரா மட்டுமே செல்போன்களில் இடம்பெற்றிருந்தது. அதுவும் நோக்கியா மொபைலில் போட்டோ எடுத்தால்தான் நன்றாக வரும். எனவே நோக்கியா செல்போனுக்கான போட்டி அதிகமாக இருந்தது. அதன் பின்னர்தான் அந்த சம்பவம் நடந்தது.

அதாவது ஆண்ட்ராய்டு மொபைல்களின் வருகை. அவ்வளவுதான், எல்லாம் ஆண்ட்ராய்டு வந்த பின்னர் தலைகீழாய் மாறிவிட்டது. சம்சாங் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து முன்னேறியது. குறிப்பாக தனது கேமரா திறனை 5 MP, 10 MP என உயர்த்த தொடங்கியது. மக்கள் கூட்டம் நோக்கியாவை மறந்து சாம்சங் பக்கம் சாய்ந்தனர். மக்கள் முதன் முதலில் மொபைல்களை பயன்படுத்த தொடங்கியபோது நிச்சயம் நோக்கியாவிலிருந்துதான் தொடங்கியிருப்பார்கள்.
அதேபோல மக்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களை பயன்படுத்த தொடங்கியபோது சாம்சங்கிலிருந்துதான் தொடங்கியிருப்பார்கள். அப்போதைக்கு சந்தையில் சோனி, HTC, ஆப்பிள் என பல மொபைல்கள் இருந்தாலும் சாம்சங்தான் குறைவான விலையில் கிடைத்தது. எனவே மார்க்கெட்டில் எங்கு பார்த்தாலும் சாம்சங் பெயர்தான் அடிபட்டது. ஆனால் நோக்கியா இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கவில்லை. இழந்து போன தனது ராஜ்யத்தை மீண்டும் கட்டமைக்க விண்டோஸை அது கையில் எடுத்தது.
அதுவரை 5,10,15 MP என விளையாடிக்கொண்டிருந்த சாம்சங், சோனி, HTC, ஆப்பிள் மொபைல்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நோக்கியா தனது 'லுமியா 1020' மொபைலை அறிமுகப்படுத்தியது. இதில் உள்ள கேமரா 41 MP திறன் கொண்டதாகும். மொத்த மொபைல் மார்க்கெட்டும் இந்த மொபைல் வெளியானபோது ஒரு நிமிடம் அப்படியே ஸ்டன்னாகி நின்றுவிட்டது. விலையுயர்ந்த ஆப்பிள் மொபைலில் கூட இவ்வளவு அதிகமான திறனில் கேமரா கொடுக்கப்படவில்லை. ஆனால் இதில் ஓர் குறை இருந்தது. அதாவது இந்த மொபைலில் ஆண்ட்ராய்டுக்கு பதில், விண்டோஸ் பயன்படுத்தப்பட்டது.
9 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட்ராய்டு செயலியையே மக்கள் பெரிய அளவில் பயன்படுத்த பழகி இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது விண்டோஸை எப்படி பழகுவார்கள்? எனவே இந்த மொபைல் பாதி வெற்றி பாதி தோல்வியடைந்தது. ஆக இதுதான் கேமராவின் பவர். மொபைல் சந்தைகளை பொறுத்த அளவில் எத்தனை MP கேமரா இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு மொபைல் போனுக்கும் கேமராதான் கெத்து. கேமரா எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த போனை மக்கள் விரும்புவார்கள்.
இந்நிலையில்தான் முதன் முதலாக உலக அளவில் வேறு எந்த மொபைல் நிறுவனங்களும் அறிவிக்காத புதிய அறிவிப்பை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, சாம்சங் நிறுவனம் 440 MP கேமரா திறன் கொண்ட மொபைலை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் 200 MP கேமரா திறன் கொண்ட Samsung Galaxy S23 Ultra 5G மொபைல் சந்தையில் விற்பனையில் இருக்கிறது. இந்த 200MP சாதனையை முறியடிக்கும் வகையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த 440 MP கேமரா திறன் கொண்ட மொபைலை சாம்சங் அறிமுகப்படுத்த இருக்கிறது.
அதேபோல இது விற்பனைக்கு வருவதற்கு முன்னர் 320MP கேமரா திறன் கொண்ட Galaxy S26 Ultra மொபைலை சாம்சங் நிறுவனம் வெளியிடும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. எப்படி இருப்பினும் இந்த மொபைல்கள் திட்டமிட்டபடி சந்தைக்கு வந்தவிட்டால் சோனி, HTC, ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் தங்களது கேமராவின் திறனை உயர்த்த வேண்டியதாக இருக்கும். இதில் சுவாரசியம் என்னவெனில், மனித கண்களே மொத்தமாக 576 MegaPixels திறனைதான் கொண்டிருக்கின்றன. எனவே போகிற போக்கை பார்த்தால் விரைவில் மனித கண்களுக்கு இணையான திறன் கொண்ட கேமராக்களை மொபைல் நிறுவனங்கள் கொண்டு வந்துவிடும் என்று தோன்றுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications