காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் மேஜிக்! இனி தாகம் எடுத்தால் சட்டையை கழற்றினால் போதும்! எப்படி?
டெக்சாஸ்: அடுத்து ஒரு உலகப் போர் வந்தால் அது தண்ணீருக்காகத் தான் வரும் என்பது கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு கருத்தாக இருக்கிறது. இதற்கிடையே காற்றில் இருந்து தண்ணீரை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு அதிநவீன ஜாக்கெட்டை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பல வழிகளில் நமக்கு உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு என்பது இன்று உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வறண்ட பகுதிகள் மற்றும் பயணங்களின் போது சுத்தமான குடிநீர் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சவாலுக்குத் தீர்வாக, அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளனர். இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை நேரடியாகக் குடிநீராக மாற்றும் திறன் கொண்டது.

இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கே காண்போம். இந்த ஜாக்கெட் சாதாரண துணியால் ஆனது அல்ல. இதில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை டெக்ஸ்டைல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி செயல்படுகிறது?
- ஈரப்பதத்தை ஈர்த்தல்: வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நீராவி அல்லது ஈரப்பதத்தை இந்த ஜாக்கெட்டில் உள்ள துணி உறிஞ்சிக் கொள்கிறது.
- சேகரிப்பு: உறிஞ்சப்பட்ட ஈரப்பதம், ஜாக்கெட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கண்டெய்னருக்கு எடுத்துச் செல்லப்படும்.
- நீராக மாற்றுதல்: சேகரிக்கப்பட்ட ஈரப்பதம் வெப்பப்படுத்தப்பட்டு, பின்னர் குளிர்விக்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் முடிவில் அது சுத்தமான குடிநீராக மாறுகிறது.
எவ்வளவு தண்ணீர்
இந்த ஜாக்கெட்டை அணிந்திருப்பவர் ஒரு நாளைக்கு 400 மில்லி லிட்டர் முதல் 900 மில்லி லிட்டர் வரை குடிநீரைப் பெற முடியும். அதேநேரம் எல்லா இடங்களில் இதே அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும் எனச் சொல்லிவிட முடியாது. இது அந்தப் பகுதியில் உள்ள காற்றின் ஈரப்பதத்தைப் பொறுத்து மாறுபடும். இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளும் ஒரு மனிதன், உயிர்வாழத் தேவையான குறைந்தபட்ச நீர் தேவையைப் பூர்த்தி செய்ய இது உதவும்.
இதுவரை காற்றில் இருந்து நீர் எடுக்கும் பல கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஜாக்கெட் மற்றவற்றை விட 3 முதல் 10 மடங்கு அதிகத் திறன் கொண்டது என்று நேச்சர் வாட்டர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்குக் காரணம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இழைகள் தான். இவை காற்றிலிருந்து நீரை மிக வேகமாகப் பிரித்தெடுத்து, துணியின் வழியாகக் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முந்தைய தொழில்நுட்பங்களில் நீர் துணியிலேயே தங்கிவிடும் அல்லது மெதுவாக பில்டர் செய்யப்படும். அந்தப் பிரச்சனையை இந்த புதிய வடிவமைப்பு சரிசெய்துள்ளது.
புதிய கருவி
ஜாக்கெட் மட்டுமின்றி, இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய சக்தியில் இயங்கும் வேறு ஒரு கருவியையும் ஆராய்ச்சியாளர்கள் சோதித்துள்ளனர். இது பாலைவனம் போன்ற வறண்ட இடங்களிலும், ஈரப்பதம் உள்ள இடங்களிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த கருவி ஒரு நாளைக்கு 1.3 லிட்டர் சுத்தமான நீரை உற்பத்தி செய்கிறது.
இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட தூரம் மலையேறுபவர்கள், காடுகளில் நீண்ட நாட்கள் தங்குபவர்கள், நீண்ட தொலைவுக்கு ஓடும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாகும். குடிநீர் வசதி இல்லாத எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இது மிகவும் உதவும். வயல்வெளிகளில் நீண்ட நேரம் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும், வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காலங்களில் குடிநீர் விநியோகம் தடைப்படும் போது, மீட்புப் படையினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இது உயிர் காக்கும் கருவியாக அமையும்.
முக்கியம்
உலகில் நீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், வளிமண்டலத்திலிருந்து நீரை எடுக்கும் இத்தகைய கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவை. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி, முக்கியமான தொழில்நுட்பத்தை ஆய்வகத்திலிருந்து சாதாரண மனிதனின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இது எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் வாழும் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் ஒரு எளிய முயற்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications