ஸ்மார்ட் வாட்ச் எல்லாம் பழசு! இப்போ புது டிரெண்டே இந்த குட்டி ரிங் தான்! என்னவெல்லாம் செய்து பாருங்க
வாஷிங்டன்: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் புதிதாக கேலக்ஸி ரிங் என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் இருக்கும் பல அட்டகாசமான வசதிகள் வியக்க வைப்பதாகவே இருக்கிறது.
இந்த நவீனக் காலத்தில் தொழில்நுட்பத்தில் நாம் பெரும் பாய்ச்சலை அடைந்து வருகிறோம். குறிப்பாக ஹெல்த் சார்ந்து பல தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். இது பல நேரங்களில் நமது உயிரைக் கூட காப்பாற்றி இருக்கிறது.

அடுத்து வரும் காலத்தில் இவை அதிகரிக்கவே செய்யும். ஹெல்த் மற்றும் டெக்னாலஜியும் பின்னிப் பிணைந்தே இருக்கும். இதன் காரணமாக அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஹெல்த் சார்ந்த பொருட்களை அறிமுகம் செய்து வருகிறார்கள்.
சாம்சங்: இத்தனை காலம் டெக் நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், இப்போது அடுத்த கட்டமாக ஸ்மார்ட் ரிங் அதாவது மோதிரத்தில் டெக் நிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இதில் வழக்கம் போல சாம்சங் நிறுவனம் தான் முதல் ஆளாக ஸ்மார்ட் ரிங்கை சந்தைக்குக் கொண்டு வர ஆர்வம் காட்டி வருகிறது. பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கான புரோட்டோ டைப்பை தான் சாம்ஸ்சங் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. நமது உடல் நிலை குறித்த துல்லியமான தகவல்களைத் தர ஏஐ தொழில்நுட்பத்தையும் சாம்ஸ்சங் நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்த கேலக்ஸி ரிங் மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்றும் சாம்சங் தெரிவித்துள்ளது.
"பெரிய ஆபத்து.." கூகுள் யூஸ் பண்ணீங்களா.. திடீரென எச்சரித்த மத்திய அரசு.. உடனே இதை பண்ணுங்க முதல்ல
ஸ்மார்ட் ரிங்: சாம்சங் கேலக்ஸி ரிங் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனம் குறித்த கூடுதல் தகவல்களை சாம்சங் நிறுவனம் தற்போது எதுவும் அறிவிக்கவில்லை. மேலும், இந்த ஸ்மார்ட் ரிங் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்களும் இல்லை. இருப்பினும், எப்போது வெளியானாலும் இது சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த கட்ட பாய்ச்சலைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த கேலக்ஸி ரிங்கை அனைத்து சாம்சங் ஸ்மார்ட் பொருட்களைப் போலவே சாம்சங் ஹெல்த் இயங்குதளத்துடன் இணைக்க முடியும். இந்த ரிங் 24 மணி நேரமும் நமது இதயத் துடிப்பு மானிட்டர் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, தூங்கும் முறை, நாம் செய்யும் உடற்பயிற்சி என அனைத்தையும் இது கண்காணிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச்சை மிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் உலகைப் புரட்டிப் போடுவதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
புதிய வசதிகள்: இது தவிர இந்த நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து இருந்தது. புதிய கேலக்ஸி ஏஐ தொழில்நுட்பம் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ், டேப் எஸ் 9 சீரிஸ், கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5, கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி எஸ் 23 எஃப்இ உள்ளிட்ட மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மொபைல்களை தாண்டி மற்ற கருவிகளிலும் இதை அறிமுகப்படுத்தவும் சாம்சங் திட்டமிட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications