"பெரிய ஆபத்து.." கூகுள் யூஸ் பண்ணீங்களா.. திடீரென எச்சரித்த மத்திய அரசு.. உடனே இதை பண்ணுங்க முதல்ல
டெல்லி: பிரபலமாக இருக்கும் கூகுள் குரோமில் ஆபத்து உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், அதில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் இணையம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற சூழலே இருக்கிறது. இதனால் நமது வாழ்வில் இணையம் என்பது பின்னிப் பிணைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

கூகுள் குரோம்: உலகின் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் பிரவுசராக இருப்பது கூகுள் க்ரோம் தான். மொபைலாக இருந்தாலும் சரி டெஸ்க்டாப்பாக இருந்தாலும் சரி நெட்டிசன்கள் முதலில் செல்வது இந்த கூகுள் குரோம் பிரவுசருக்கு தான். இதைப் படிக்கும் நீங்கள் கூட இதில் படிக்கவே வாய்ப்பு அதிகம். இதற்கிடையே அந்த கூகுள் குரோம் பிரவுசரில் தான் இப்போது பிரச்சினை இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கூகுள் குரோமின் டெஸ்க்டாப் வெர்ஷனை பயன்படுத்துவோருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் CERT-In எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனையில், 'கூகுள் குரோமில் பல பாதிப்புகள் இருப்பது தெரிய வருகிறது. இது எங்கோ இருந்து கொண்டு கூட நமது கணினியில் தாக்குதலை நடத்த அனுமதிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வளவு தான்.. மொத்தமாக முடிவுக்கு வரும் ஜிமெயில் சேவை? நெட்டிசன்கள் அதிர்ச்சி! கூகுள் சொல்வது என்ன
யாருக்கு ஆபத்து: கூகுள் குரோமின் v122.0.6261.57 அல்லது அதற்கு முந்தைய விண்டோஸ், ஆப்பிள் மேக், லினக்ஸ் வெர்ஷன்களில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் சமீபத்தில் புதிய அப்டேட்டை வெளியிட்டு இருந்த நிலையில், அதில் 12 பாதுகாப்பு குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாகத் தெரிவித்து இருந்தது. அந்த 12இல் இரண்டு தீவிர பிரச்சினை கொண்டதாகும். ஐந்து மிடியம் பிரச்சினை கொண்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைகளை தங்களுக்குக் கண்டறிந்து தெரிவித்த நபருக்குக் கூகுள் நிறுவனம் 28,000 டாலர் அதாவது சுமார் 23 லட்ச ரூபாயைச் சன்மானமாகவும் வழங்கி உள்ளது. இதற்கிடையே மத்திய அரசும் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய் வேண்டும் என்பது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது உங்கள் கூகுள் குரோம் தளத்தை அப்டேட் செய்தால் இந்த பிரச்சினை இருக்காது.
சரி செய்வது எப்படி: பொதுவாக டெஸ்க்டாப்பில், அதாவது விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக் கூகுள் குரோம் தானாக அப்டேட் ஆகிவிடும். ஒருவேளை அது தானாக அப்டேட் ஆகவில்லை என்றாலும் கூட நாமாக அப்டேட் செய்தால் இந்த பிரச்சினை சரியாகிவிடும். நாம் கூகுள் குரோமை manualஆக எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம்.
1. கூகுள் குரோமை அப்டேட் செய்ய உங்கள் டெஸ்க்டாப்பில் குரோமை ஓபன் செய்யவும். அதில் வலது புறம் மேலே இருக்கும் 3 மூன்று செங்குத்து புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.
2 அதில் கீழே தோன்றும் மெனுவில், ஹெல்ப் என்பதை க்ளிக் செய்து,, அதில் 'About Google Chrome’ என்பதை கிளிக் செய்யுங்கள்
3. இந்த 'About Google Chrome’ என்பதை மட்டும் கிளிக் செய்தால் போதும் கூகுள் குரோம் தானாக அப்டேட் ஆகிவிடும்.
4 கூகுளின் புதிய வெர்ஷன் டவுன்லோட் ஆன பிறகு 'Relaunch’ என்பதை கிளிக் செய்தால் போதும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications