எல்லாமே முக்கிய புள்ளிகள் ஆச்சே.. 24+ நாடுகளில் ஜீரோ கிளிக் ஹேக்.. இது மிக பெரிய ஆபத்து! எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த டிஜிட்டல் யுகத்தில் நமது முக்கியமான டேட்டாக்களை பாதுகாப்பது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. முன்பெல்லாம் கூட யூசர்கள் எதாவது லிங்கை கிளிக் செய்தால் மட்டுமே செல்போன் ஹேக் ஆகும்.. ஆனால், இப்போது யூசர்கள் செல்போனை தொடவே இல்லை என்றாலும் கூட ஹேக்கிங் செய்யும் அபாயம் இருப்பதாகவும் இதன் மூலம் சுமார் 90 முக்கிய புள்ளிகளின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காலத்தில் செல்போன் என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. நமது முக்கியமான டேட்டாக்கள் எல்லாமே செல்போனில் தான் சேமிக்கப்பட்டு இருக்கிறது.

whatsapp mobile

இதனால் செல்போனை ஹேக் செய்தால் ஒருவர் குறித்து A டூ Z வரை எல்லா தகவல்களையும் எடுத்துவிடலாம் என்ற சூழலே இருக்கிறது. இதற்கிடையே சர்வதேச அளவில் முக்கிய நபர்களைக் குறிவைத்து சர்வதேச கும்பல் ஹேக்கிங் செய்துள்ளது.


செல்போன் ஹேக்:

இதில் சுமார் 24க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 90 முக்கிய புள்ளிகளின் செல்போன்கள் ஸ்பைவேர் மூலம் ஹேக் செய்யப்பட்டுள்ளன. செய்தியாளர்கள் மற்றும் சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருப்போரை குறிவைத்து இந்த ஹேக்கிங் நடந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல ஹேக்கிங் நிறுவனமான பாராகான் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஹேக்கிங் கருவியால் இவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக பாராகனின் ஸ்பைவேர்கள் சர்வதேச அளவில் அரசு அமைப்புகளுக்கு (குறிப்பிட்ட நாட்டின் மத்திய போலீஸ் அல்லது உளவுத் துறை) மட்டுமே விற்கப்படுகிறது. அதேநேரம் இந்த ஹேக்கிங் செய்தது அரசு அமைப்புகளா இல்லை எதாவது தனியார் நிறுவனமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சர்வதேச அளவில் சுமார் 90 செல்போன்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளன.


எப்படி:

பொதுவாக நாம் எதாவது லிங்கை கிளிக் செய்தால் மட்டுமே செல்போன் ஹேக் ஆகும். ஆனால், இந்த ஸ்பைவேர் "ஜீரோ-கிளிக்" என்ற முறையில் ஹேக் செய்யப்படும். அதாவது யூசர்கள் எந்தவொரு லிங்க்கையோ அல்லது டாக்குமெண்டையோ டவுன்லோடு செய்ய தேவையில்லை. யூசர்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட செல்போன் ஹேக் செய்யப்படும். இந்த முறையில் யூசர்களுக்கு டிஜிட்டல் ஆவணங்கள் அனுப்பப்படும். அது உங்கள் செல்போனுக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான்! தானாக ஒட்டுமொத்த செல்போனும் ஹேக் ஆகிவிடும் என்று மெட்டா அதிகாரி தெரிவித்தார்.


ஆபத்து:

ஹேக்கிங் என்பது எந்தளவுக்கு ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. இத்தனை காலம் யூசர்கள் எதாவது லிங்க்கை கிளிக் செய்தால் மட்டுமே ஹேக் ஆகும். ஆனால், இது எப்படி எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட உங்கள் தகவல்களைத் திருடிவிடுகிறது. இது வரும் காலங்களில் இன்னுமே கூட ஆபத்தானதாக மாறலாம்.


90+ நபர்கள்

அதேநேரம் யாரைக் குறிவைத்து இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது குறித்த தகவல்களை மெட்டா அதிகாரிகள் பகிரவில்லை. இருப்பினும், ஐரோப்பாவில் பலர் என 24+ நாடுகளில் சுமார் 90 பேர் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக மட்டும் கூறினர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இதுபோன்ற ஸ்பைவேர் சாப்ட்வேர்கள் தயாரிப்பதையே அனைத்து நிறுவனங்களும் நிறுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+