Year Ender 2023: மிரள வைத்த AI மாடல்கள்.. எச்சரிக்கும் வல்லுநர்கள்.. சாதனைகள் என்ன? சர்ச்சைகள் என்ன
வாஷிங்டன்: இந்தாண்டு நாம் அடைந்த மிகப் பெரிய வளர்ச்சி என்பது ஏஐ துறையில் தான். ஓராண்டில் ஏஐ துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், இதில் அடைந்த வளர்ச்சி, இருக்கும் சிக்கல்கள் ஆகியவை குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த 2023ஆம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்தாண்டு பல்வேறு துறைகளில் நாம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம். அதிலும் குறிப்பாக ஏஐ துறையில் நமது வளர்ச்சி மிகப் பெரியது.

இந்த 2023 ஏஐ துறைக்கானது என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு ஏஐ வளர்ச்சி இந்தாண்டு அபரிவிதமாக இருந்துள்ளது. இது நமது வாழ்க்கை முறையைக் கூட மாற்ற ஆரம்பித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
சாட் ஜிபிடி: ஓபன் ஏஐ நிறுவனம் கடந்தாண்டு சாட் ஜிபிடி என்ற ஏஐ மாடலை வெளியிட்டிருந்தாலும் இந்தாண்டு தான் அது மிகப் பெரிய மாற்றங்களை இந்தத் துறையில் ஏற்படுத்தத் தொடங்கியது. இந்த சாட் ஜிபிடியின் வெற்றி என்பது மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு இடையே மிகப் பெரிய போரை ஆரம்பித்து வைத்துள்ளது., மைக்ரோசாப்ட் சாட்ஜிபிடியை தனது மற்ற சாப்ட்வேர்களில் இணைக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் பிராட் என்ற புது ஏஐ மாடலை வெளியிட்டுள்ளது.
மேலும், சுகாதாரம், கல்வி, பிஸ்னஸ் என பல்வேறு துறைகளிலும் இந்த ஏஐ மாடல்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை ஆரம்பித்து வைக்க உள்ளது. அதேநேரம் இந்த ஏஐ மாடல்களால் ஏற்படும் வேலையிழப்பு, தனியுரிமை சார்ந்த பிரச்சினைகளும் நமக்குக் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் ஏஐ துறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
போட்டியில் பல ஏஐ மாடல்கள்: முன்பே சொன்னது போல என்னதான் சாட் ஜிபிடி கடந்தாண்டு இறுதியில் வெளியானாலும் கூட, இந்தாண்டு தொடக்கத்தில் தான் அது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சாட் ஜிபிடி குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், பல்வேறு நிறுவனங்களும் ஏஐ துறையில் உள்ளே நுழைந்தன. கூகுள் நிறுவனம் பிராட் என்ற ஏஐ மாடலை அறிமுகப்படுத்திய நிலையில், எலான் மஸ்க் க்ரோக் (Grok) என்ற ஏஐ மாடலை அறிமுகம் செய்தார்.
இந்தாண்டு மார்ச் மாதம் ஓபன் ஏஐ நிறுவனம் ஜிபிடி 4 மாடலை வெளியிட்டது. இதுவரை வெளியானதில் இதுதான் வலிமையான ஏஐ மாடலாக இருந்தது. இந்த ஏஐ மாடலால் போட்டோக்களையும் ஏற்றுக் கொள்ள முடியும். அந்த போட்டோக்கள் குறித்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும். மேலும், அதன் அதிகபட்ச வார்த்தை லிமிட்டும் மூவாயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
ஆபத்து: ஏஐ மாடல்கள் மிக வேகமாக வளர்ச்சி அடைவதாகவும் இதனால் மனிதக் குலத்திற்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் பலரும் எச்சரித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் மற்றும் பல்வேறு ஏஐ துறை வல்லுநர்கள் இதில் நாம் அவசரம் காட்டுவதாகவும் ஒரு ஆறு மாதங்களுக்கு ஏஐ சார்ந்த ஆய்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதியிருந்தனர். இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. இருப்பினும், இதுபோல ஆய்வுகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை.
அதேபோல ஏஐ மாடலால் வேலையிழப்பும் கூட அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது. இதுவரை ஏஐ துறையால் எங்கும் மிகப் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படவில்லை என்ற போதிலும், ஆங்காங்கே இது குறித்த தகவல்கள் வெளியாகித் தான் வருகிறது. ஏஐ வளர்ச்சிக்குப் பிறகு உருவாகும் புது வேலைகளும் கூட தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்காது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆபாசம்: இந்தாண்டு ஏஐ மாடல்கள் உருவாக்கிய போட்டோக்களும் இணையத்தில் பகீர் கிளப்பியது. போப் பிரான்ஸிஸ், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா என யாருமே இதில் இருந்து தப்பவில்லை. இந்த படங்களை முதலில் பார்ப்போரால் இது ஏஐ உருவாக்கிய போலி படம் என்பதைச் சொல்ல முடியாது. அந்தளவுக்குத் தத்ரூபமாக இந்த போட்டோக்கள் இருந்தது.
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து போலியான டீப் ஃபேக் வீடியோ கூட இணையத்தில் உலா வரத் தொடங்கியது. இது தேசியளவில் பரபரப்பைக் கிளப்பியது. தொடர்ந்து பல டாப் நடிகைகளில் டீப் ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது. மிக எளிதாக உருவாக்கப்படும் இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் சர்ச்சையைக் கிளப்பியது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications