2 எழுத்து நடிகை பாஜகவுக்கு போறாரா? பக்கா காங்கிரஸ் குடும்பமாச்சே.. "இவங்க" இந்த பிரபலத்தின் அம்மாவா?
சென்னை: "மீனாவின் மகள் மிகவும் புத்திசாலி... நன்றாக படித்து வருகிறார்.. இப்போதைக்கு நடிகை மீனா டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.. தன்னுடைய மகளின் படிப்பு, எதிர்காலத்தில் மட்டுமே பிரதானம் கவனத்தை மீனா செலுத்தி வருகிறார்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.. அத்துடன் மீனா அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர்.. மீனாவை பொறுத்தவரை எப்போதுமே கலகலவென பேசுவார்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 7 மொழிகள் தெரியும்.. அத்தனை மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் மீனா.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி
மீனா நடிகையாவதற்கு முக்கிய காரணமே அவரது அம்மாதான்.. நடிகைகளுக்கு சில நடிகர்கள் சினிமாவில் பாதுகாப்பாக இருப்பார்கள்.. ஆனால், மீனாவுக்கு அவரது அம்மாதான் பாதுகாப்பு.. இன்றுவரை மீனாவின் நிழலாக அவரது அம்மா இருந்து வருகிறார்.. சின்ன வயதிலிருந்தே மீனாவுக்கு எல்லாமே அவரது அம்மாதான்.
அந்த நேரத்தில் மீனாவின் அம்மா காங்கிரஸில் இருந்தார்.. மீனாவின் அம்மா பெயர் ராஜ் மல்லிகா.. அவரும் நடிகையாக இருந்தவர்... எங்க பாட்டன் சொத்து என்ற படத்தில் ஹீரோயினாக ஜெய்சங்கருடன் நடித்திருப்பார்..
பிரபலமான நடிகை
அவரது தங்கை ராஜ் கோகிலாவும் பிரபலமான நடிகை ஆவார். 1966 இல் வெளியான மோட்டார் சுந்தரம்பிள்ளை திரைப்படத்தில் சிவாஜி - மணிமாலா தம்பதியின் மகளாக கோகிலா நடித்தார். 1970 இல் வெளியான தேடிவந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவின் தோழியாக நடித்தார். 1972 இல் வெளியான பாலசந்தரின் வெள்ளி விழா படத்தில் ஜெமினி கணேசனின் மகளாக நடித்திருந்தார். 1966 இல் இருந்தே மலையாளத்தில் கோகிலா நடிக்க ஆரம்பித்தார்.
அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் பங்காற்றினார். அப்போது மீனா குழந்தை நட்சத்திரமாக இருந்தார்.. மீனாவின் அம்மா கட்சி கூட்டங்களுக்கு செல்ல நேரிட்டால், மீனாவின் அப்பாதான், மகளை ஷூட்டிங் அழைத்து செல்வார்.
காமிக்ஸ் புத்தகங்கள்
மீனா நிறைய காமிக்ஸ் புத்தகங்களை படிக்கக்கூடியவர் என்பதால், கடைகளுக்கு அழைத்து சென்று புத்தகங்கள், சாக்லட்டுகளை வாங்கி தந்துவிட்டு, அவரது அம்மா அரசியல் கூட்டங்களுக்கு செல்வார். தேசிய காங்கிரஸில் பொறுப்பிலும் இருந்தவர்.. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மூப்பனார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்.. இந்திரா காந்தி பங்கேற்ற பல நிகழ்வுகளில் பங்கேற்றவர் ராஜ் மல்லிகா..
இப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரின் இல்ல விழாவுக்கு மீனா சென்றிருந்தார்.. ஆனால், அந்த நிகழ்வில் கலந்து கொள்ள மீனா துளியும் விரும்பவில்லை.. அவரை அழைத்து சென்றது கலா மாஸ்டர்தான். காரணம், தன்னுடைய அம்மா தீவிரமான காங்கிரஸ கட்சியை சேர்ந்தவர்..
பாஜக அமைச்சர் இல்ல பொங்கல் விழா
அப்படியிருக்கும்போது, பாஜக அமைச்சரின் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் பங்குபெற தயக்கம் காட்டியிருக்கிறார்.. பாஜக அமைச்சரின் விழாவில் பங்கு பெற்றால், அது தன்மீது வேறுவிதமான அரசியல் சாயத்தை பூசிவிடும் என்று மீனா நன்றாகவே அறிந்திருந்தார்.. எனவே, அமைச்சரின் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பங்குபெற தயக்கம் காட்டியிருக்கிறார்..
ஆனால, கலா மாஸ்டர் பாஜகவை சேர்ந்தவர்.. பிரபலங்களை இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வதால், அது தனக்கான செல்வாக்காக இருக்கும் என்று நினைத்துதான், மீனாவை சீஃப்கெஸ்ட்டாக அழைத்து சென்றுள்ளார்.. தன்னுடைய நலம்விரும்பியான கலா மாஸ்டர் அழைத்ததால், அதனை மீனாவால் தவிர்க்க முடியவில்லை. உடனே, மீனா பாஜகவில் இணைய போகிறார் என்று சிலர் சோஷியல் மீடியாவில் கிளப்பிவிட்டுவிட்டார்கள..
அரசியலில் கால் பதிக்கிறாரா
அந்த டெல்லி பயணம் குறித்து நிறைய கிசுகிசுக்கள் இதுபோல் வெளியாகின.. அதையெல்லாம் கேள்விப்பட்டு மீனா வருத்தப்பட்டதாக, கலா மாஸ்டரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
ஆனால், காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த மீனாவுக்கு அரசியலில் ஈடுபடுவதில் துளியும் எண்ணமில்லை.. வரும் நாட்களிலும் அரசிலுக்கு வரும் எண்ணம் மீனாவுக்கு இல்லை. அவர் முழுக்க முழுக்க தன்னுடைய மகளின் படிப்பு, எதிர்காலத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications