சந்தானத்துக்கு அம்மாவானார் 50 வயசு கஸ்தூரி.. ஏற்க முடியலயே.. டிடி நெக்ஸ்ட் லெவல் இப்பவே அசரடிக்குதே
சென்னை: DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது.. முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
விஜய் டிவியிலிருந்து, சினிமாவுக்குள் நுழைந்து காமெடி நடிகராக அறிமுகமாகி, இன்று ஹீரோ அவதாரம் எடுத்துள்ளவர் சந்தானம்.. 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த "தில்லுக்கு துட்டு", 2023-ல் வெளிவந்த "டிடி ரிட்டர்ன்ஸ்" போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன...

நல்ல வரவேற்பு
எனவே, இதன் 3ம் பாகமாக "டிடி நெக்ஸ்ட் லெவல்" என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.. பிரேம் ஆனந்த் டைரக்ட் செய்திருக்கிறார்..
சந்தானத்துடன் செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலரும் நடித்துள்ள இந்த படத்துக்கு ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். இதன் கதை சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்தானம் சொன்ன விஷயம்
வரும் மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளதால், இதனை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். யாஷிகா ஆனந்த் இந்த படத்தில் சந்தானத்துக்கு தங்கையாகவும், நிழல்கள் ரவி சந்தானத்துக்கு அப்பாவாகவும் நடித்திருக்கிறார்களாம். சந்தானத்துக்கு அம்மாவாக கஸ்தூரி நடித்திருக்கிறாராம்.
சமீபத்தில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சந்தானம், நடிகை கஸ்தூரி குறித்தும், படத்தின் சுவாரஸ்ய அனுபவங்கள் குறித்தும் ஷேர் செய்திருந்தார். அதில் அவர், "ஒருநாள் போன் செய்து, என்னுடைய படத்தில் நடிக்க உங்களுக்கு இஷ்டமா? என்று எஸ்டிஆர் என்னிடம் கேட்டார். இப்படி சிம்பு கேட்டு, நான் நோ சொல்ல முடியுமா? அதனால் நடிக்க சம்மதம் என்றேன்.
தங்கை, அப்பா கேரக்டர்கள்
டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் வழக்கத்தை விட பல கூடுதல் சிறப்புகள் இருக்கு.. நான் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் இதுவாகும். கூடவே இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகன் இணைந்திருக்கிறார்கள். நான் சினிமா விமர்சனம் செய்யும் யூடியூப்பராக நடிக்கிறேன். இந்த விமர்சனத்தால் எனக்கு ஒரு எதிர்பாராதவிதமான சம்பவம் நடக்கிறது. அதற்கு பிறகு என்னென்ன சிக்கல்கள் வருகிறது. அதை சமாளித்து எப்படி மீள்கிறேன் என்பதுதான் கதை.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் எனக்கு அம்மாவாக கஸ்தூரியும், அப்பாவாக நிழல்கள் ரவியும் நடித்திருக்கின்றனர். தங்கையாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதையை கஸ்தூரி மேடத்திடம் கதை சொல்வதற்கு முன்பு, இந்த படத்தில் நீங்க சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்கணும் என்றதுமே, என்னாது? நான் சந்தானத்திற்கு அம்மாவா? எனக்கென்ன அவ்ளோ வயதா ஆகிவிட்டது? என்று ஷாக் ஆனாங்க..
கஸ்தூரிக்கு இது தேவையா
உடனே நாங்க, "மேடம் கதையை கேளுங்க .. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லுங்க' என்றோம். அப்புறம் கதையை கேட்டதுமே கஸ்தூரி மேடத்திற்கு பிடித்துவிட்டது.. ஏன் என்றால், அவருடைய கேரக்டர் இந்த படத்தில் மிக முக்கியமானதாகவும், த்ரில்லாவும் இருக்கும்.. திடுக்கிடும் திருப்பங்கள் நிறைய இருக்கிறது" என்றார்.
சந்தானத்துக்கு 45 வயது, கஸ்தூரிக்கு 50 வயதாகிறது.. சந்தானத்தின் இந்த பேட்டி வெளியானதுமே, சந்தானத்துக்கு கஸ்தூரி அம்மாவா? ஹீரோயினாகவே கஸ்தூரியை பார்த்துவிட்டு, திடீரென அம்மாவாக நடிப்பதை எப்படி ஏற்பது? கஸ்தூரிக்கு இது தேவையா என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications