80ஸ் ரீயூனியனில் நடந்த 'சஸ்பென்ஸ் டிராமா'! யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க! ரஜினி ஆப்சென்ட் காரணம் இதுதானா?
சென்னை: என்னதான் வயசானாலும், நம்ம 80ஸ் நட்சத்திரங்களுக்கு வருஷத்துக்கு ஒரு தடவை கூடி 'மஜா' பண்ணுறதுல இருக்குற சந்தோஷமே தனிதான்! இந்த வருஷம் இந்த '80'ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்' நிகழ்ச்சி நம்ம சென்னையில கோலாகலமா நடந்திருக்கு. பாவம், இத்தனை வருஷமா இவங்க சந்திச்சுப் பேசுற விஷயங்கள், இந்த வருஷம் ரெண்டு பெரிய தலைகளைப் பத்திப் பேசாம முடியல!

ரீயூனியனில் ஜொலித்த நட்சத்திரங்கள்
இந்த வருஷம் நடந்த ரீயூனியன்ல மீனா, பாக்கியராஜ், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், பிரபு, ராதா, பூர்ணிமா, நதியா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன்னு கோலிவுட், பாலிவுட்ன்னு ஜொலிச்சவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஆட்டம் பாட்டத்தோட கொண்டாடி இருக்காங்க.
வழக்கமா சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனான்னு தெலுங்கு சூப்பர்ஸ்டார்ஸ் எல்லாம் கலந்துக்குவாங்க. ஆனா, இந்த வருஷம் ஒரு பெரிய சஸ்பென்ஸ் என்னன்னா, ஆரம்பகாலத்துல கலந்துகிட்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மட்டும் சமீபகாலமா வருவதே இல்லையாம்! இதுதான் இப்போ சமூக வலைதளங்கள்ல பெரிய பேசுபொருள் ஆகியிருக்கு.

பேச்சால வந்த சங்கடம்
பாலகிருஷ்ணா ஏன் வரலைன்னு சிலர் கருத்து சொல்றதக் கேட்டா, நமக்குச் சிரிப்பு தான் வருது! பாலகிருஷ்ணா எப்பவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவராம். அதனால, அவர் வந்தா மத்தவங்களுக்குச் சங்கடம் ஏற்படலாம்னு சிலர் அவரை அழைப்பதில்லையாம். இல்லன்னா, "அவர் அழைச்சாலும் வரமாட்டார்"னு ஒரு குரூப் சொல்றாங்க.
ஆனால், 2019-ல சிரஞ்சீவி வீட்டில நடந்த ரீயூனியனுக்குத் தனக்கு அழைப்பே வரவில்லைனு பாலகிருஷ்ணா ஒரு பேட்டியில சொல்லி, "சிரஞ்சீவி வேண்டுமென்றே என்னைக் கூப்பிடல"னு வெளிப்படையா ஒரு குண்டைப் போட்டு இருந்தார். பாலகிருஷ்ணா வரலைன்னா, அவரே கூச்சப்பட்டு வரலையா, இல்லன்னா பாவம், அவரை அழைக்கலையான்னு ஒரு மர்மமே ஓடிக்கிட்டு இருக்கு!
இப்போ அவர் 'அகண்டா 2' மற்றும் கோபிசந்த் மலினேனி பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறதுனாலதான் வரலைன்னு சில ரசிகர்கள் காரணம் சொன்னாலும், சமூக வலைதளங்கள்ல இது பெரிய விவாதப் பொருளாகிடுச்சு.
சென்னையில் ரீயூனியன்
இத்தனை பேர் கூடிய ரீயூனியன்ல ரஜினிகாந்தைப் பத்திப் பேசாம இருக்க முடியுமா? 80ஸ்ல இருந்து சூப்பர்ஸ்டாரா இருக்கும் நம்ம ரஜினி சார், இந்த ரீயூனியன்ல கலந்துக்கவே இல்லை. அவரு எல்லா நடிகர், நடிகைகளோடவும் நட்போட பழகினாலும், அவர் கலந்து கொள்ளாததுக்குக் காரணம் என்னன்னா, அவர் தற்போது சென்னையிலேயே இல்லையாம்! அவர் ஆன்மீகச் சுற்றுலாவாக இமயமலைக்கு போயிருக்கார்.

வழக்கமா பட ரிலீசுக்கு முன்னாடி இமயமலைக்குப் போற ரஜினி, இந்த வருஷம் 'கூலி' பட ரிலீஸ் சமயத்துல போக முடியாமப் போனதால, இப்போ புறப்பட்டுப் போயிட்டாராம். ஒரு பக்கம் சென்னைல நம்ம ஆட்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிட்டு இருக்க, சூப்பர்ஸ்டார் மட்டும் பனிமலைகள்ல அமைதியாத் தியானம் பண்ணிக்கிட்டு இருக்கார்!
மொத்தத்துல, இந்த 80ஸ் ரீயூனியன் கொண்டாட்டத்தை விட, "யார் வந்தாங்க? யார் வரல?"ன்னு பேசுனதுதான் பெரிய என்டர்டெயின்மென்ட்டாக மாறியிருக்கு! அதிலும் ரியூனியனில் எடுத்த வீடியோவை நடிகை நதியா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பல பிரபலங்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications