பாடகர் மனோவின் மகன்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு.. ஆனால் ஒரு நிபந்தனை!
சென்னை: பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் இருவரும் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்களை தாக்கியதாக அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு உயர்நீதி மன்றத்தில் பாடகர் மனோவின் மகன்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு ஒரு நிபந்தனையும் கொடுத்து இருக்கின்றனர். அதுபற்றி பார்க்கலாம்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோ சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஷாகிர் மற்றும் ரபிக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு பாடகர் மனோவின் மகன்கள் தங்கள் வீட்டில் முன்பு நண்பர்களோடு பேசிட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர் மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மனோவின் மகன்களுக்கும் அந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் மனோவின் மகன்கள் அவருடைய நண்பர்களோடு ரித்தீஷ் மற்றும் கிருபாகரன் என்ற இளைஞர்களை தாக்கி தாக்கி அவர்களை முட்டி போட வைத்ததை பார்த்து அவருடைய நண்பர்கள் ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து சில வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தனர். அப்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர்களை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பரான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை கைது செய்தனர்.
மனோவின் மகன்கள் உட்பட மூன்று பேர் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மனோவின் மனைவி கண்ணீரோடு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் என்னுடைய மகன்கள் எந்த தப்பும் செய்யவில்லை. என்னுடைய கணவர் பெயரை கெடுக்க வேண்டும் என்று சிலர் சதி செய்கிறார்கள் அந்த இளைஞர்கள் தான் எங்களை தாக்கி இருந்தார்கள் என்று கூறியிருந்தார்.

பிறகு பாடகர் மனோவின் மகன்களை மோட்டார் சைக்கிளில் வந்து எட்டு பேர் சேர்ந்து உருட்டு கட்டை கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மனோவின் மகன்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்த போது 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications