தமிழா தமிழாவில் பரபரப்பு! நொந்து விவாகரத்து கேட்ட பெண்! கடைசியாக சொன்ன வார்த்தையால் திகைத்த அரங்கம்
சென்னை: ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பேசிக் கொண்டாலே தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் இந்த உலகம், விவாகரத்தான தாயும் , தந்தையிடம் வளரும் தோளுக்கு மேல் வளர்ந்த மகனும் சந்தித்தால் என்னென்ன பேசும் என்பதற்கு இந்த காணொலி உதாரணம்!
பொதுவாக எந்த ஒரு விஷயமாகவே இருந்தாலும் அதை விவாதமாக்கி பார்ப்பார்கள். வீடுகளில் கூட சில விவாதங்கள் எழும். அது போல் டிவி சேனல்களிலும் பொதுவான விஷயங்கள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் ஒவ்வொரு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் விவாகரத்தால் பாதிக்கப்படுவது ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.
இதில் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் உட்கார்ந்திருந்தனர். ஆண்கள் அணியில் ஒரு பெண்ணும் இருந்தார். அவர் ஆண்களுக்கே பாதிப்பு என்பது குறித்து பேச வந்திருந்தார்.
இந்த நிலையில் பெண்கள் அணியில் இருந்தவர்கள் பேசுகையில், விவாகரத்தால் பெண்களுக்குத்தான் அதிக பாதிப்பு. ஆண்களிடம் யாரும் மனைவி குறித்து கேட்பதில்லை. ஆனால் பெண்களிடம் கணவர் குறித்து நிறைய பேர் கேட்கிறார்கள்.
அப்போது விவாகரத்து என சொன்னால் என்ன நினைப்பார்களோ, எப்படி பேசுவார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்றனர். அதிலும் குறிப்பாக பெண் ஒருவர் பேசும் போது , எனக்கும் என் கணவருக்கும் ஒத்து போகவில்லை என்பதால் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது.
8 ஆண்டுகளாக விவாகரத்துக்காக நான் போராடி வருகிறேன். நான் பொருளாதார அடிப்படையில் சற்று குறைவாக இருப்பதால் எனக்கு இரு மகன்களும் என் கணவரிடம் வளர்ந்து வருகிறார்கள். எனது இளைய மகன் சட்டம் படித்துள்ளார். என்னை விட உயரமாக இருப்பார்.
அவர் ஒரு நாள் என்னை பார்க்க என் வீட்டிற்கு வந்தார். அப்போது என்னை தேடி ஒரு இளைஞர் வந்ததாகவே ஊர் பேசியது. இது போன்ற பிரச்சினைகளை ஆண்கள் சந்திப்பதே இல்லை. நான் இளமையாகவே இருப்பது என் தவறா, நான் என் தலைமுடிக்கு வெள்ளை சாயம் பூசிக் கொள்ளலாமா என்ற யோசனையில்கூட இருக்கிறேன் என தனது ஆதங்கத்தையும் மக்கள் பேசும் வெறுப்பு பேச்சையும் உருக்கமாக விவரித்தார்.
அப்போது எதிரணியில் பேசிய ஆண் ஒருவரிடம், பெற்ற மகனை தாய் பார்க்க வந்த போது ஊரார் இப்படி பேசுவது தவறுதானே என நெறியாளர் கேட்டார். அதற்கு அவர் நெருப்பில்லாமல் புகையாது என யாருமே எதிர்பாராத, மிகவும் வன்மத்தனமான கருத்தை பேசியதும் அந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் ஒரு வேளை கேள்வியை தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்து அந்த நெறியாளர் மீண்டும் ஒரு முறை விளக்கிவிட்டு உங்கள் கருத்து வாபஸ் பெறுங்கள் என்றார். அதற்கு அந்த நபர் முடியவே முடியாது என்றார். மேலும் அந்த பெண் இடத்தில் உங்கள் தங்கையோ அக்காவோ இருந்திருந்தாலும் இப்படித்தான் நெருப்பில்லாமல் புகையாது என சொல்வீர்களா என கேட்ட போது, தாயாக இருந்தாலும் சரி தங்கையாக இருந்தாலும் சரி தவறுதவறுதான் என மீண்டும் மீண்டும் அந்த பெண் மீது சேற்றை வாரி இறைத்தார்.
இதையடுத்து கோபமடைந்த நெறியாளர், அவரை திட்டி, இப்போது உங்கள் கருத்தை வாபஸ் பெறுங்கள், இல்லாவிட்டால் ஷோவை விட்டு வெளியேறுங்கள் என்றார். உடனே அந்த நபரும் ஷோவை விட்டு வெளியேறினார். இப்படியெல்லாம் பேசுவார்களா, அந்த பெண்ணை பற்றி எதுவுமே தெரியாத போது நெருப்பில்லாமல் புகையுமா என அவரது கேரக்டரை சந்தேகம் எழுப்புவது போல் அந்த நபர் பேசியது மிக மிக தவறானது என்பதை அவர் உணரவே இல்லை.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications