A.R. Rahman: ஏ.ஆர்.ரஹ்மானின் சோக பின்னணி! இது பலருக்கு பாடம்! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் உச்சம் தொட்டு, ஆஸ்கர் வரை வென்று இந்திய சினிமாவில் தனிச் சாம்ராஜ்யம் அமைத்திருக்கிறார். இவருக்கு பின்னால் இருந்த போராட்டங்களும், துன்பங்களும் குறித்து அவர் சமீபத்தில் பகிர்ந்துகொண்ட தகவல்கள், ரசிகர்களிடையே ஆழ்ந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருண்ட குழந்தை பருவம்
ஏ.ஆர்.ரஹ்மான் தான் சிறுவயதில் பட்ட துன்பங்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர் சொன்னதாவது: "நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சென்னையில் தான் கழித்தேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை ஸ்டூடியோக்களில் வேலை செய்து வந்தார். நாங்கள் கோடம்பாக்கத்திற்கு அருகில் தான் வசித்து வந்தோம். அங்குதான் எல்லா ஸ்டுடியோக்களும் இருந்தன" என்றார்.
அப்பாவின் தியாகம்
அவர் தங்கியிருந்த வீட்டைச் சொந்தமாக வாங்கித் தர வேண்டும் என்பதற்காக, அவருடைய தந்தை ஒரே நேரத்தில் மூன்று வேலைகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அப்பா மற்றும் அம்மாவை அவருடைய குடும்பத்தினர் வெளியே தள்ளிவிட்டதால் ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினர்.
மூன்று வேலைகள் செய்ததால் அவரது தந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. "அதுதான் என் குழந்தைப் பருவத்தின் இருண்ட பக்கம், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள நிறைய நேரம் பிடித்தது" என ஏ.ஆர்.ரஹ்மான் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
சிங்கிள் அம்மாவின் பலம்
ரஹ்மான் ஒன்பது வயதில் தந்தையை இழந்தபோது, அன்று முதல் அவர் தன் தாயார் பற்றி பெருமையாகப் பேசினார்: "என் அம்மா ஒரு சிங்கிள் மதராக இருந்தாலும் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்மணியாக இருந்தார். எல்லா வலிகளையும், அவமானங்களையும் தாங்கி, எங்களை பாதுகாக்க அவர் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எங்களை தனியாக வளர்த்த ஒரு வலிமையான பெண் அவர்" என போராட்டங்களை சுமந்த தாய்மையை பாராட்டியுள்ளார்.
இசையின் பேரில் குழந்தை பருவம
சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரஹ்மான், தன் தாயாரின் ஊக்குவிப்பால் இசையைத் தொடர்ந்தார். அவர், "என் வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை 40 மற்றும் 50 வயதுடைய இசைக்கலைஞர்களுடன் ஸ்டுடியோக்களில் கழித்தேன்" என்று கூறியுள்ளார். இதன் காரணமாக, பள்ளி வாழ்க்கையையும், நண்பர்களுடன் விளையாடும் நேரத்தையும் செலவிட அவருக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அப்படிப் பட்ட ரஹ்மான், 'ரோஜா' படம் மூலம் திரைத்துறைக்கு வந்து, ஆஸ்கர் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குங்கள்
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த வாழ்க்கைப் பின்னணி, நம் அனைவருக்கும் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், நம் குடும்பத்துக்காக தான் உழைக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. ரஹ்மானின் தந்தை போல நம்மில் பலரும் குடும்பத்துக்காக நம்மைக் கடுமையாக வருத்திக் கொள்கிறோம்.
ஆனால், பணம் மட்டுமே எப்போதும் பாசத்தை நிரூபிக்காது. நமது உற்றார் உறவினர்கள் அல்லது குழந்தைகள் விரும்புவது, நாம் அவர்களுடன் அன்பாகச் செலவிடும் நேரத்தையும் தான். ரஹ்மான் கூறியது போல, அவருக்குப் பள்ளிப் பருவமும், நண்பர்களுடன் விளையாடும் நேரமும் கிடைக்கவில்லை. இந்தச் சிறுசிறு மகிழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நினைவில் நிற்கும். எனவே, உங்கள் குடும்பத்துக்காக சம்பாதிப்பது சரியே, ஆனால் அவர்களுடன் உங்களுடைய நேரத்தையும் செலவிடுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications