Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதயத்தை நொறுக்கிய முரளியின் கடைசி நொடி.. வெறும் கரித்துண்டால் “கடவுள் முரளி வாழ்க”.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதயம் படத்திற்காக இயக்குநர் கதிர், "மதுரையில் இருந்து மருத்துவம் படிக்க வந்த பையன், படித்து முடித்து செல்லும்போது நோயாளியாகப் போகிறான்" என்ற ஒரே வரியில் கதையை சொல்லி முரளியை சம்மதிக்க வைத்திருக்கிறார்.. அந்த படம்தான் 'இதயம் முரளி' என்ற பட்டத்தையும் அவருக்கு பெற்று தந்தது என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "முரளி கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவரது அப்பா சித்தலிங்கையா, கன்னட திரையுலகில் பிரபலமான ஒரு இயக்குநர்.. நம்ம ஊரில் பாலச்சந்தர் போல.. பல வெற்றி படங்களை கன்னடத்தில் தந்துள்ளார்.

Television Murali Idhayam Murali

முரளி வசனங்கள்

முரளிக்கு படிப்பு சரியாக வரவில்லை.. 10ம் வகுப்பில் ஃபெயில் ஆகிவிட்டார்.. அதனால், தன்னுடைய படங்களிலேயே முரளியை உதவி இயக்குனராக சேர்த்து கொண்டார் அவரது அப்பா.. பிறகு வசனங்களை நன்றாக உச்சரிக்க கற்று கொண்டார்.. ஒருகட்டத்தில் அப்பாவின் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வசனங்களை சொல்லியும் தந்தார்.. இப்படித்தான் நடிப்பில் ஆர்வம் முரளிக்கு வந்தது.

மகனை வைத்து அப்பா படம் எடுத்தார்.. ஆனால், படப்பிடிப்பின்போது, முரளியின் நிறத்தைக் கேலி செய்து, கிண்டல்களுக்கு உள்ளானார். இதனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது ஆனால், அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது..

ஷோபாவுடன் திருமணம்

பெங்களூரில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உயர்ந்ததுபோல், தானும் தமிழ் சினிமாவில் முயற்சி செய்தால் வெற்றிபெறலாம் என்ற எண்ணம் முரளிக்கு வந்தது.. அப்படித்தான், தமிழில் அறிமுகமானார்..

19 வயசில் முரளிக்கு ஷோபா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது.. இவர்தான் தற்போது முரளியின் மனைவி ஆவார்.. ஷோபாவை தீவிரமாக காதலித்த நிலையில், அதுகுறித்து தன்னுடைய அம்மாவிடம் சொல்லி உள்ளார்.. ஆனால், அப்பா 4 வருடங்கள் கல்யாணத்துக்கு காத்திருக்க சொன்னார்.

ஆனால் பெண்ணின் வீட்டில் 4 வருடம் காத்திருக்க முடியாத சூழல் என்பதால், தன்னுடைய அம்மாவின் உதவியுடன் ஷோபாவை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் முரளி.. பிறகு வேறு வழியில்லாமல் இந்த திருமணத்தை முரளியின் அப்பா ஏற்றுக் கொண்டார்..

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

முரளியின் அப்பா மிகவும் கண்டிப்பானவர்.. ஆனால், அம்மாவுக்கு முரளி செல்லப்பிள்ளை. 1991-ல், தீபாவளி தினத்தன்று முரளி வீட்டு மொட்டை மாடியில் எல்லாரும் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்கள்.. அப்போது புஸ்வானம் முரளியின் அம்மா மீதுவிழுந்து, அவரது சேலையே பற்றிக் கொண்டு எரிந்தது.. இதனால் தீயில் எரிந்து கதறி அழுதபடியே, மாடியிலிருந்து கால் தடுக்கி கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார்..

தீபாவளி அன்று எல்லாருக்கும் சமைத்து போட்ட அம்மா, சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் கண்ணெதிரே விழுந்து இறந்ததை முரளியால், கடைசிவரை மறக்க முடியவில்லை.

முரளியின் நிறத்தைக் கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான், வெற்றிக்கொடி கட்டு படத்தில் இடம்பெற்ற "கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்ற பாடல் முரளிக்காகவே அமைக்கப்பட்ட பாடலாகும்..

வெறும் கரித்துண்டால் கடவுள் முரளி வாழ்க

கடவுளே அஜித் என்று இன்று கூப்பிடுவதுபோல அன்று 80களின் பிற்பகுதியில், "கடவுள் முரளி வாழ்க" என்று கரித்துண்டால் சென்னை சுவர்களில் அவரது ரசிகர் ஒருவர் எழுதினார்..

வளசரவாக்கம், சாலிகிராமம், அடையாறு என சென்னை முழுக்க எழுதி கொண்டிருந்தார்.. முரளியின் தீவிர ரசிகர் ஒருவர், மதுரையிலிருந்து சென்னை வந்து வெறும் கரித்துண்டால் இப்படி எழுதி வைத்துவிட்டு போவார்.

அதர்வா சகோதரியின் நிச்சயதார்த்தம் முடிந்த தினத்தன்று இரவு தூங்க சென்றிருக்கிறார் முரளி.. ஆனால் நள்ளிரவு 2, 3 மணிக்கெல்லாம் உயிர் பிரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. மறுநாள் காலை 7 மணி ஆகியும் முரளி எழவில்லை என்பதால், அதர்வா ரூமில் சென்று பார்த்துள்ளார்.. அப்போதுதான் முரளி இறந்தது தெரியவந்துள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+