ஜெயம் ரவி இப்போதும் மருமகன் தான்.. அவரால் 100 கோடி கடன்! ஆர்த்தி ரவி அம்மா அறிக்கை, ஆதரவு கொடுத்த நடிகைகள்
சென்னை: நடிகர் ரவி மோகன் கடந்த வருடத்தில் அவருடைய மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தார். இவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் சில மாதங்களாகவே ஆர்த்திரவி மற்றும் ரவி மோகன் இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஆர்த்தி ரவியின் அம்மாவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தான் 100 கோடி கடனில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு அவருக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
பிரபலங்கள் வீட்டு செய்திகள் என்றாலே அதை பற்றி அறிந்து கொள்ள மக்கள் அதிகமாக ஆர்வமாக இருக்கிறார்கள். அதனாலே சில பிரபலங்கள் பற்றி பல்வேறு வதந்திகளும், பரப்பி வருகிறது. அதே நேரத்தில் சில நேரங்களில் அந்த வதந்திகள் உண்மையாகவும் இருக்கிறது. கடந்த வருடத்தில் நடிகர் ரவி மோகன் அவருடைய மனைவியை பிரியப் போகிறார் என்ற வதந்தி பரவி வந்தது. அடுத்த சில நாட்களிலேயே ரவி மோகன் அதை உறுதி செய்திருந்தார்.

விவாகரத்து வழக்கு
பிறகு விவாகரத்து வழக்கும் கொடுத்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து ரவிமோகன் ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா மீது குற்றச்சாட்டுகளை வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. காரணம் ரவி மோகனும், ஆர்த்தியும் பிரிவதற்கு காரணம் ஆர்த்தியின் அம்மா தான் என்று பல கூறி வருகிறார்கள்.
100 கோடி கடன்
இந்த நிலையில் இது குறித்து மறுப்பு தெரிவித்து ஆர்த்தியின் ரவியின் அம்மா நீண்ட அறிக்க வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் ஆரம்பத்தில் வீராப்பு திரைப்படத்தை தயாரித்து இருந்தேன். பிறகு சீரியலை தயாரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் தன்னுடைய மருமகன் ஜெயம் ரவி சொன்னதால்தான் சினிமாவை தயாரிக்க தொடங்கி இருந்தேன். மருமகன் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு, சைரன், பூமி போன்ற திரைப்படங்கள் தனக்கு தோல்வியை தந்தது. அதனால் 100 கோடி கடனில் இருக்கிறேன்.
சுஜாதா விஜயகுமார் அறிக்கை
ஆனால் இப்போதும் என்னுடைய மகளும் மருமகனும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் நான் எந்த இடத்திலையும் என்னுடைய மருமகன் மீது கடனை வாங்கி வைக்கவில்லை. அவர்தான் கடனுக்கு பொறுப்பு என்று சொல்லவில்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் அதற்கான ஆதாரத்தை ஜெயம் ரவி காட்டட்டும் என்று கூறி இருந்தார். இந்த பதிவை நடிகை ராதிகா சரத்குமார், குஷ்பூ உட்பட சில சினிமா பிரபலங்களும் லைக் செய்து இருக்கிறார்கள். அதுபோல ஆர்த்தி ரவியும் இதை லைக் செய்து இருக்கிறார்.

ரவி மோகன் அறிக்கை
இந்த பதிவுக்கு கமாண்டை சுஜாதா ஆப் செய்து வைத்திருப்பதால் கமெண்டுகள் எதுவும் வரவில்லை. ஆனால் சோசியல் மீடியா முழுக்க இந்த பதிவை வைத்து தான் இப்போது பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களுக்காக தான் போராடுகிறேன் என்று போஸ்ட் போட்ட போது பலரும் ஜெயம் ரவியை திட்டி வந்தனர். அதைத்தொடர்ந்து ரவி மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில், என்னுடைய மகன்களுக்கு விபத்து நடந்ததை கூட என்னிடம் சொல்லவில்லை. மூன்றாவது மனிதன் போல என்னிடம் இன்சூரன்ஸ் காரங்க சொன்ன பிறகுதான் எனக்கு தெரிந்தது. என்னுடைய மகன்களை பார்ப்பதற்கு என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் என்னுடைய மகன்களை முன்னிறுத்தி அனுதாபம் தேடுவதற்காக ஆர்த்தி நினைக்கிறார் என்று பதிவு வெளியிட்டிருந்தார்.
குற்றச்சாட்டு
அதனால் ரவி மோகன் மீது அனுதாப அலை வீசியது. பலரும் ஆர்த்தி ரவி மற்றும் அவருடைய அம்மாவை திட்டி வந்தனர். இதனால் ஆர்த்தி ரவியின் அம்மா இப்போது பரபரப்பான அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே ரவி மோகன் வெளியிட்ட அறிக்கையில் இதுதான் கடைசி அறிக்கை இனி நான் எந்த விளக்கமும் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இப்போது சுஜாதாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ரவி மோகன் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications