3 வருஷமா நடித்த சீரியலிலிருந்து திடீரென விலகிய கதாநாயகி.. அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: ஜீ தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஆஷிதா படுகோனே சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு சிலரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விடுகிறது. சிலர் உடல்நிலை பிரச்சனை அல்லது கால் சீட் பிரச்சனை போன்றவற்றால் சீரியலில் இருந்து விலகுகிறார்கள்.

ஆனால் அதுவரைக்கும் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினியை ஒரு கேரக்டராக பார்த்து ரசித்தவர்கள் புது நடிகர்கள் அந்த இடத்தில் வரும் போது குழப்பம் அடைகிறார்கள். இதனால் டிஆர்பி குறைய வாய்ப்பு இருக்கிறது. அதனாலேயே அதிகமான சீரியலில் ரீப்ளேஸ்மெண்ட் வைப்பது குறைவுதான்.
ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிலருடைய மாற்றம் வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஆஷிகா படுகோனே சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அவருக்கு பதிலாக இனி யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ஆஷிதா சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்போது அவர் அது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
ஆனாலும் மாரி சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் சீரியலில் இருந்து விலகுவதாக பதிவிட்டு இருக்கிறார்.
அதில், மூன்று அற்புதமான ஆண்டுகள் மற்றும் 800 எபிசோடுகளுக்குப் பிறகு ஜீ தமிழில் மாரியாக என்னுடைய பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பயணம் முழுவதும் நீங்கள் எனக்கு அளித்த அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.
தமிழ்நாட்டு ரசிகர்கள் தொடர்பு கொள்வது ஒரு ஆசிர்வாதம். அதை நான் எப்போதும் போற்றுவேன். எல்லாவற்றிற்கும் நன்றி.. புதிய வாய்ப்புகளில் நான் அடி எடுத்து வைக்கும் போது உங்களின் ஆதரவு தொடரும் என நம்புகிறேன். என்றும் உங்கள் மாரியாக ஆஷிகா படுகோனே என்று அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார்.
ஏற்கனவே மாரி சீரியலில் அடுத்தடுத்து பல பிரபலங்கள் மாறி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் வனிதா விஜயகுமார் அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. அவருடைய காட்சிகள் காட்டப்படுவது இல்லை.
அதுபோல இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த சோனாவும் திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருந்தார். அதற்குப் பிறகும் சில மாற்றங்கள் நடைபெற்றது. இந்த சீரியலில் அமானுஷ்யம், மாந்திரீகம், பாம்பு, ஆவி என பல சுவாரசியத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது.
அதுபோல சமீபத்தில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பான நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் தொடங்கி 6 மாதத்திற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. அதுபோல இப்போது இந்த சீரியலின் கதாநாயகி விலகுவதால் சீரியல் முடிவடைய போகிறதா? அல்லது இவருக்கு பதில் வேறு யாரும் நடிக்கப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை சேனல் தரப்பினர் இன்னும் கூறவில்லை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications