அபிநய் வெளியிட்ட உருக்கமான வார்த்தைகள்..அட இவ்வளவு பீல் பண்ணி இருக்காரே..!!
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அபிநய் உருக்கமான வார்த்தைகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அபிநய் வெளியிட்ட போஸ்ட் பார்த்து ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்து இருக்கின்றனர் .

ஜெமினி கணேசன் குடும்பத்தை சேர்ந்தவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஐந்தாவது சீசன் மூலமாக ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான அபிநய் ஒரு திரை குடும்பத்தை சேர்ந்தவர்தான். திரை உலகின் வாரிசாக இருந்தாலும் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு தெரியாத வகையில் தான் இருந்து வந்துள்ளார். தன்னுடைய திறமையும் கேரக்டரையும் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இவருக்கு கிடைத்த முதல் ரியாலிட்டி ஷோ வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தியிருக்கிறார். பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக அறிமுகமானதும் இவரால் பல பிரச்சனைகளும் தொடங்கியிருந்தது.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்
திருமணம் முடிந்து தனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அவருடைய மனைவி மற்றும் குழந்தை அதிகமாக மிஸ் பண்ணி சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியிடம் நட்பைத் தாண்டி பழகுகிறார் என்று பாவனி மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அபிநய்க்கு அதிகமான நெகட்டிவ் பெயர் தோன்றத் தொடங்கிவிட்டது. அபிநய் மனைவி கூட அவருடைய பெயருக்கு பின்னாடி இருந்த அபிநய் பெயரை மாற்றி விட்டார். இதனால் அபிநய் வீட்டில் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் பரவி வந்தது.

காதலர் தினத்தில் வெளிவந்த அன்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு அபிநய் வெளியேறிய நேரத்தில்கூட பிக் பாஸ் வீட்டிற்குள்ளே இருந்த சிபி முதலிய போட்டியாளர்கள் ஒரு சிலர் அபிநய் வீட்டிற்கு சென்றதும் என்ன மாற்றி வரவேற்பு இருக்குமோ?? என்றுதான் கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீண்டும் ஐந்தாவது சீசனில் சிறப்பு விருந்தினராக அபிநய் கலந்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தற்போது மீண்டும் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். காதலர் தினம் அன்று அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது அபிநயின் மனைவியும் காதலர் தின வாழ்த்துக்களை கூறி அன்பையும் வெளிகாட்டி இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

அபிநய் வெளியிட்ட பதிவு
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு அபிநய் வெளியேறி இருக்கிறார். வெளியேறி ஒரு சில நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். அதில் எனது பிக்பாஸ் அல்டிமேட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் 100 நாட்களுக்கு மேலாக பிபி வீட்டிற்குள் இருப்பது ஒரு பெரிய அனுபவம். இந்த கற்றல் என் வாழ்க்கையில் என்னை வெகு தூரம் அழைத்துச் செல்லும். நினைவுகூர்வதற்கு நிறைய நினைவுகள் கிடைத்திருக்கிறது. வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்ல பல நண்பர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் அற்புதமான தருணங்கள் இந்த பிக்பாஸ் பயணத்தை நம்பமுடியாத ஒன்றாக மாற்றிய அனைவருக்கும் நான் ஒரு பெரிய நன்றியை சொல்ல வந்திருப்பது கவலையான உணர்வுகளுடன் தான். எனது பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்திலும் என்னை நம்பி வீட்டின் நடுவில் நின்ற எனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications