Abhinay : "மருந்துக்கு காசு இல்ல! வயித்துல துர்நாற்றம்! கொள்ளி போட யாருமில்லை!" நடிகர் அபிநயின் சோக மரணம்!
சென்னை: சினிமாக்காரங்க வாழ்க்கை வெளியில பார்க்கத்தான் ஜாலியா இருக்கும். ஆனா, உள்ளுக்குள்ள அவங்க அனுபவிக்கிற வேதனைகள் இருக்கு பாருங்க... அது பலருக்கு தெரிவதே இல்லை. வருமானம் வரும்போது அதை சேர்த்து வைக்காமல் சிலர் செலவு செய்வதால் பிற்காலத்தில் கஷ்டபடுகின்றனர்.'துள்ளுவதோ இளமை' படத்துல தனுஷோட ஃப்ரெண்டா நடிச்சு, அப்புறம் நிறைய படங்களுக்கு டப்பிங் எல்லாம் பேசிப் பிரபலமான நடிகர் அபிநய், 44 வயசுல ரொம்ப கொடுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு, இப்போ நம்மளை விட்டுப் போயிட்டாரு.
கல்லீரல் நோயால ரொம்ப கஷ்டப்பட்ட அபிநய், சிகிச்சை பலன் இல்லாம சமீபத்துல உயிரிழந்தார். ஆனா, அவர் இறப்புக்கு அப்புறம் வெளியான ஒரு தகவல், 'ஒரு கலைஞன் இந்த மாதிரி அனாதையா சாகலாமா?'ன்னு எல்லாரையும் கலங்கடிச்சிருக்கு!

சாக்லேட் பாய்
'துள்ளுவதோ இளமை' படத்துல ரொம்ப ஹேண்ட்சம்மா இருந்த அபிநய், ஒரு கட்டத்துல பட வாய்ப்பு இல்லாமப் போனதுக்கு அப்புறம், தனிமையில ரொம்பவேத் தள்ளாடி இருக்கார். ஒரு காலத்துல 'சாக்லேட் பாய்' இமேஜ்ல இருந்தவர், வருமானம் இல்லாம போனதுனால அம்மா உணவகத்துல சாப்பிட்டு வந்ததா சொல்லியிருக்கார்.
இந்தச் சோகங்களால குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, கல்லீரல் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டார். சிகிச்சைக்காக பணம் இல்லாமத் தவிச்சப்போ, KPY பாலா, நடிகர் தனுஷ் மாதிரியான ஒருசில கலைஞர்கள் தான் உதவி செஞ்சிருக்காங்க. கல்லீரல் மாற்றுச் சிகிச்சைக்காக எல்லா ஏற்பாடுகளையும் நண்பர்கள் செஞ்சும், அபிநய் குடிப்பதை நிறுத்தாததால், உறவினர்கள் எல்லாரும் அவரைக் கைவிட்டுட்டுப் போயிட்டாங்களாம்!
கொள்ளி வைக்ககூட யாருமில்ல
அபிநய் வீட்டுல தூங்கிக்கிட்டு இருக்கும்போதே உயிர் பிரிஞ்சிருக்கு. ஆனா, அதுக்குப் பிறகு நடந்த விஷயம்தான் மனசை ரொம்ப வறுத்திருக்கு. அவரு இருந்த வாடகை வீட்டின் உரிமையாளர், "உடலை இங்கே வைக்கக் கூடாது"ன்னுப் பிரச்சனை பண்ணியிருக்கார். கடைசியா நடிகர் சங்கம் தலையிட்டு சமாதானம் செஞ்சிருக்காங்க.
உருக்கமான தகவல்
அபிநய் வீட்டிற்கு போன நடிகர் விஜய் முத்து, இந்த சோகமான நிலையை பேட்டியில் உருக்கமாச் சொல்லியிருக்கார். "வீட்ல இறந்ததால, உறவினர்களோடக் கையெழுத்து கட்டாயமாத் தேவைப்பட்டுச்சு. ஆனா, உறவுகள் யாருமே வரலை!". அதுமட்டுமில்லாம, கல்லீரல் பாதிப்பு முத்திப்போனதால, அவர் வயிற்றுப் பகுதியில இருந்து துர்நாற்றம் வந்ததாவும், கொள்ளி கூட யாரு வைக்கிறதுன்னுத் தெரியாமத் தவிச்சதாவும் அவர் சொன்னது, எல்லாரையும் கலங்கடிச்சிருக்கு.
பாலா தான் முடிச்சார்
கடைசியா, நடிகர் சங்கமும், KPY பாலாவும் தான் முன் நின்னு, அபிநய் அம்மா வழிச் சொந்தக்காரர் ஒருத்தர் மூலமாக, இறுதி சடங்குகளைப் பண்ணி முடிச்சிருக்காங்க. பாலா, "தம்பி மாதிரி இருந்து எல்லா வேலையும் செஞ்சான்னு" RK சுரேஷ் மாதிரியான நடிகர்கள் பாராட்டி இருக்காங்க.
அதுபோல அபிநய் பற்றி அவருக்கு டிரைவர் ஆக இருந்த நபர் பேசும்போது, சார் ரொம்ப தங்கமானவரு எப்பவும் ஜாலியா பேசிட்டு இருப்பாரு. ஆனால் அவருடைய உடல்நிலை ரொம்பவும் மோசமாகத்தான் இருந்தது. அவரால் நம்மை போல ஈசியாக பாத்ரூம் போக முடியாது. அவர் அதற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டார். அவரை பார்ப்பதற்கு யாரும் இல்லை என்பதால் ஒரு ஆளை வேலைக்கு அமர்த்தி தான் அவரை கவனித்துக் கொள்ள வைத்திருந்தோம். அவர் இறப்பதற்கு முந்தைய நாள் தான் பாலா சாருக்கு போன் பண்ணி வாடகை போடணும் என்று கேட்க பாலா சார் 19,500 பணம் அனுப்பி இருக்கிறார். அந்த பணத்தை கூட வீட்டு ஓனருக்கு அபிநய் மாற்றல. அதற்கு முன்பு இறந்து போயிட்டாரு. அவருடைய இறப்பு செய்தியை உறவினர்களிடம் சொன்னபோது அவர்கள் வருவதற்கே ரொம்ப யோசிச்சாங்க. வந்தா நாம அந்த செலவுகளை ஏற்கனுமோனு நினைச்சாங்க என்று டிரைவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.
அழகு, திறமைன்னு எல்லாமே இருந்தும், சினிமாவுல ஜெயிக்க முடியாம, தனிமைக்குள்ளப் போயி, 44 வயசுலயே ஒரு கலைஞனோட வாழ்க்கை இப்படி முடிஞ்சு போனது, நம்ம தமிழ் திரையுலகத்துல ஒரு சோக அத்தியாயத்தை எழுதிருக்கு.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications