நடிகர் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பில் நடந்த அசம்பாவிதம்.. கடல் காட்சி ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து
சென்னை: நடிகர் ராம்சரண் தயாரிக்கும் திரைப்படத்தின் சூட்டிங்கில் திடீர் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று என்று சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் இன்று திரைப்படத்தின் சூட்டிங் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது கடல் போன்ற காட்சி ஷூட்டிங் செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான டேங்க் உடைந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் பலருக்கும் பிரபலமான ராம்சரண் பிடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல தான் முதல் முறையாக தயாரிக்கும் திரைப்படத்திற்கான ஷூட்டிங்கும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்து வீடியோஸ் வைரலாகி வருகிறது. அதில் ஒரு இடத்தில் கடல் போன்று செட் அமைக்கப்பட்டு அங்கு சூட்டில் நடத்தப்பட்டு இருக்கிறது அப்போது அங்கிருந்த தண்ணீர் டேங்க் உடைந்து தண்ணீர் மொத்தமாக பீறிட்டு வெளியேறி அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்திருக்கிறது.

ஷூட்டிங்கில் விபத்து
சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து நடந்ததா? அல்லது அதற்கு முன்பே விபத்து நடந்து விட்டதா? அதை அதில் யாருக்காவது இன்னும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என்ற விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் தண்ணீரில் மூழ்கி பல கேமராக்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிகிறது. வெள்ளத்துக்குள் அதிகமானோர் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்த தண்ணீருக்குள்ளே தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். என்னதான் முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினாலும் எதிர்பார்க்காத விதமாக அசம்பாவிதம் நடந்து இருக்கிறது.
ராம்சரண் தயாரிக்கும் படத்தில் விபத்து
ராம்சரண் முதல் முறையாக தன்னுடைய தயாரிப்பில் "இந்தியா ஹவுஸ்" என்கிற படத்தை தயாரித்து வருகிறார். கார்த்திகேயா 2 புகழ் நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு நிறுத்தம்
இந்த திரைப்படத்திற்காகத்தான் சம்பாபாத் அருகில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு சூட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு இருந்த வாட்டர் டேங்க் திடீரென உடைந்து தண்ணீர் அரங்கை சூழ்ந்துள்ளது. இதில் உதவி ஒளிப்பதிவாளர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதுபோல பட குழுவினர் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications