பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறும் பிக் பாஸ் ஆரி.. அதுவும் யாருக்கு பதிலா தெரியுமா? செம முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடந்த நடிகர் ஆரி விரைவில் "கலைஞர் டிவி"யில் ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இயக்குனராகவும், நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருக்கும் கரு பழனியப்பன் ஏற்கனவே "ஜீ தமிழில் தமிழா தமிழா" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெரிய அளவில் பிரபலமடைந்தார். ஆனால் திடீரென்று பல வருடங்களாக தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியில் இருந்து கருப்பழனியப்பன் வெளியேறி இருந்தார். அதே நேரத்தில் தனக்கு அழுத்தம் அதிகமாக இருந்ததால் தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தேன்.

நம்மால் சுயமாக எந்த இடத்தில் முடிவெடுக்க முடியவில்லையோ பிறகு அந்த இடத்தில் நாம் இருந்து அர்த்தம் இல்லை என்று விளக்கமும் கொடுத்திருந்தார். அதே நேரத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வந்த அடுத்த சில வாரங்களிலேயே கலைஞர் டிவியில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கரு பழனியப்பன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தொகுப்பாளராக ஆரி இருப்பது போன்ற காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் சிலர் ஆரி எடுத்த முடிவு சரி என்று கூறி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்துவிட்டார் ஆனால் அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் பெரியதாக இல்லை என்பதால் தொகுப்பாளராக மாறிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் ஆரியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருப்பதாகவும் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஆரி கலந்து கொண்டிருந்தபோது ஆரம்பத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தார்.
ஆனால் அடுத்த ஒரு சில வாரங்களிலேயே அவருக்கும் பாலாஜிக்கு ஏற்பட்ட பிரச்சனை, அதற்கு பிறகு உள்ளிருக்கும் மற்றவர்களோடு இவர் தனித்து இருந்ததாலே இவர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதே நேரத்தில் விவசாயத்தில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாகவே உள்ளே சாப்பாடு வீண் ஆகும் போதெல்லாம் ஆரி குரல் கொடுத்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
அதனாலயே அந்த சீசனில் வெற்றியும் பெற்றிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு பெரிய அளவில் திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது இவர் சின்னத்திரைக்கு வந்திருக்கும் நிலையில் இதன் மூலம் அவருடைய கனவுகள் நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications