“இந்த” மாற்றம்தான் வேண்டும்..“இதை” ஏன் செய்ய முடியவில்லை? கடும் கோபத்தில் பிக் பாஸ் ஆரி கேட்ட கேள்வி
சென்னை: நாளை தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் ஆரி பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் குழப்பங்கள் குறித்து ஆரி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
காலம் காலமாக வாக்கு அளிப்பதற்கு பணம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக ஆரி இப்போது கேட்டிருக்கும் கேள்விக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பல கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. என்ன தான் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகள் தீவிரமாக சோதனை செய்தாலும் பல்வேறு முறைகளில் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்வதில் அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று குறித்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில் பாகிஸ்தானுக்கு போய் அவர்களுக்கு தெரியாமல் அடித்து விட்டு வந்து விடும் அளவிற்கு நம்மிடம் திறமை இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் காசு கொடுப்பதை நம்மால் தடுக்க முடியவில்லை. நான் என்னுடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது யாரெல்லாம் தேர்தலில் நிற்கிறார்களோ அவர்களுடைய வங்கி கணக்கை முடக்கிவிட வேண்டும். ஒரு தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவு செய்ய முடியுமோ அந்த பணத்தை மட்டுமே எடுக்க அனுமதித்து விட்டு மீதி பணத்தை முடக்கி வைத்து விட வேண்டும்.

பிறகு தேர்தல் முடிந்ததும் வங்கி கணக்கை ரிலீஸ் செய்துவிடலாம் என்று கூறிக் கொண்டிருந்தார். அது நகைச்சுவையாக இருந்தாலும் யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது என்றும் ஆரி இருக்கிறார். அதே நேரத்தில் அரசியல்வாதிகள் எவ்வளவு பணத்தை கொண்டு வேண்டுமானாலும் மக்களிடம் கொண்டு போய் கொடுத்து விடுகிறார்கள்.
ஆனால் சாதாரண நடுத்தர மக்களால் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேலே எடுத்து சென்றால் கூட அவர்களிடம் தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் எடுத்துச் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. இது போல் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இதை எல்லாம் சரி செய்ய முடியும் என்று அந்த வீடியோவில் ஆரி பேசி இருக்கிறார். ஆரி பேசிய விஷயத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications