Anand Babu: நீ எல்லாம் நாகேஷ் புள்ளையான்னு கேட்டாங்க.. காலேஜில் நடந்த சம்பவம்! நடிகர் ஆனந்தபாபு உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவை கொஞ்சம் கவனிச்சு பார்த்தாலே, சில நடிகர்கள் பெரிய ஹீரோ பட்டம் இல்லாமலே ரசிகர்களின் மனசுல இடம் பிடிச்சிருப்பாங்க. அந்த லிஸ்ட்ல ஒருத்தர் தான் நடிகர் ஆனந்த் பாபு. திறமையான நடிப்பு, இயல்பான காமெடி, அப்பாவி முகம் இவை எல்லாம் சேர்ந்து அவரை தனியாக அடையாளம் காட்டுது.

இந்நிலையில், ஆனந்த் பாபு சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி தான் இப்போ சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கு. அந்த பேட்டியில் அவர் பகிர்ந்த காலேஜ் அனுபவம் ரசிகர்களை சிரிக்கவும், அதே நேரம் நெகிழவும் வைத்திருக்கிறது.

Actor Anand Babu Nagesh

அந்த அனுபவத்தை ஆனந்த் பாபு சொல்லும்போது, "நான் காலேஜுக்கு போனதும், என்கிட்ட பாட்டு பாட தெரியுமா?ன்னு கேட்டாங்க. தெரியாதுன்னு சொன்னேன். டான்ஸ் ஆட தெரியுமா?ன்னு கேட்டாங்க. அதுக்கும் தெரியாதுன்னு சொன்னேன். உடனே நீ எல்லாம் நாகேஷ் ஐயாவோட பிள்ளையாடா?'ன்னு கேட்டாங்க. அந்த கேள்வி கேட்டதும் மனசுக்குள்ள சுருக்குன்னு ஆயிடுச்சு. அன்னைக்கு தான், நான் அப்பா பிள்ளைன்னு நிரூபிக்கணும்னு நினைச்சு டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன்"னு சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரு சம்பவமே, அவருக்குள்ள இருந்த கலைஞரை வெளியே கொண்டு வந்த தருணமா அவர் நினைச்சு பேசுற விதம், பலருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. "தந்தையின் பெயர் ஒரு பாரமா இல்ல, ஒரு பொறுப்பா மாறின தருணம்"ன்னு கூட சில ரசிகர்கள் கமெண்ட் போட்டிருக்காங்க.

நடிகர் ஆனந்த் பாபு, தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களின் மகன். அப்பாவின் பெரிய பெயரால் சுலபமா வாய்ப்புகள் கிடைச்சிருக்கலாம். ஆனா, ஆனந்த் பாபு தன்னுடைய பாதையை தனியா அமைச்சவர். ஹீரோவா, கேரக்டர் நடிகரா, காமெடி ரோல்கள்ல, நெகட்டிவ் ஷேட்ஸ் உள்ள வேடங்கள்ல - எல்லாத்திலேயும் தன்னை நிரூபிச்சிருக்கிறார்.

1980, 90-களில் பல தமிழ் படங்களில் நடித்த ஆனந்த் பாபு, தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கினார். பெரிய ஹீரோவாக இல்லையென்றாலும், அவர் வரும் காட்சிகள் படத்திற்கு ஒரு தனி சுவை கொடுக்கும். அதிலும் சேரன் பாண்டியன் படம் எல்லாம் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இவர் வளர்ந்து வந்த காலத்தில் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்தார். அதற்கு பிறகு சில வருடங்களை தாண்டி தொலைக்காட்சி சீரியல்களிலும் ஆனந்த் பாபு நடித்திருக்கிறார். குடும்பப் பார்வையாளர்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வயசு கூட கூட, கேரக்டர்களின் ஆழமும் அவருடைய நடிப்பில் கூடிக்கிட்டே போகுது.

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஆனந்த் பாபு மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறவர். மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தை முன்னிலைப்படுத்தி பேசும் அவர், தன் தந்தை நாகேஷ் மீது அளவுகடந்த மரியாதையோடு பேசுவது எப்போதும் ரசிகர்களை நெகிழ வைக்கும்.ரசிகர்களின் அன்பே தான் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்று சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+