நடிகர் அரவிந்த்சாமியின் அப்பா இந்த "பிரபலம்” தானா? இத்தனை "சீரியல்”களில் நடித்து இருக்கிறாரா?
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகன் என்று கூறும் அளவிற்கு பலருடைய மனதை கவர்ந்த நடிகர் அரவிந்த்சாமியின் அப்பா பல சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்தான்.
சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி இப்போதும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் மெட்டிஒலி சீரியலில் ஐந்து பெண்களின் தந்தையாக நடித்த நடிகர் டெல்லி குமார் தான் அரவிந்த்சாமியின் அப்பாவாம்.
திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டி கொண்டிருக்கும் அரவிந்த்சாமி தன்னுடைய அப்பாவிற்கு ரொம்பவே பயப்படும் கேரக்டர் தான். அதுபோல அப்பாவின் மீது அதிகமான மரியாதையும் வைத்திருக்கிறாராம்.

சில வருடங்களுக்கு முன்பு அதாவது 90ஸ் காலகட்டங்களில் அரவிந்த் சாமிக்கு என்று அதிகமான பெண் ரசிகர்கள் உண்டு. அரவிந்தசாமி மாதிரி தனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்காதா? என்று பல பெண்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்." பம்பாய்" திரைப்படத்தில் அரவிந்த்சாமியின் அழகு மற்றும் நடிப்பு பார்த்து ஆண்களே அவருக்கு ரசிகர்களாக மாறி இருந்தனர்.
பெரும்பாலும் மணிரத்தினம் படங்களில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்து வந்திருக்கிறார். தற்போது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமியின் தந்தையும் சினிமாவின் பிரபல நடிகர் என்பது பலருக்கும் அறியாத ரகசியம்தான்.

அது மட்டும் இன்றி நடிகர் அரவிந்த்சாமியின் அப்பா ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையில் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்தவர் தான். ஆமாம் அவர் நடிகர் "டெல்லி குமார்" தான். மெட்டிஒலி, ஆனந்தம் போன்ற பிரபல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதுவும் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக மெட்டி ஒலி சீரியலில் தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
கடைசியாக அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டவர் இல்லம்" என்ற சீரியலில் நடித்திருந்தார். அதுபோல டெல்லி குமார் டும் டும் டும் திரைப்படத்திலும், கன்னத்தில் முத்தமிட்டால், சிங்கம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கம் திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவின் தாத்தாவாக நடித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் அரவிந்தசாமிக்கு தனது அப்பா என்றால் ரொம்பவே பயமாம். சின்ன வயசில் இருந்தே மாமா வீட்டில் தான் அரவிந்தசாமி வளர்ந்து கொண்டு இருந்தாராம். ரோஜா படத்தில் நடித்த போது அப்பாவோடு சென்று தான் படம் பார்க்க போயிருக்கிறார். ஆனால் அந்த சமயத்திலும் பயத்தோடு தான் அப்பாவின் அருகில் அமர்ந்திருந்தாராம்.
அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "புது வெள்ளை மழை" என்ற பாடல் வரும்போது பாத்ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பி போய் விட்டாராம். பிறகு அந்த பாட்டு முடிஞ்ச பிறகு தான் மீண்டும் படம் பார்ப்பதற்கு வந்து இருக்கிறார். அந்த மாதிரி அப்பாவுக்கு பயந்த ஒரு நடிகராக அரவிந்தசாமி நிஜத்தில் இருந்திருந்தாலும், திரைப்படங்களில் சித்தார்த், அபிமன்யு போன்ற வில்லன் கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி விடுகிறார்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications