நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று...வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: நடிகர் அர்ஜுன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.
விரைவில் மீண்டு வா தலைவா என்று பல கடவுளை வேண்டி வருகின்றனர்.
ஆக்சன் கிங் அர்ஜுன் கொரோனாவோடு போராடி நலம் அடைவார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பரபரப்பை ஏற்படுத்திய செய்தி
வெள்ளித்திரையில் அனைவருக்கும் பரிச்சயமான ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவருடைய ரசிகர்கள் இவருக்காக பல பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். தற்போது தான் இவர் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொகுப்பாளராகவும் கலக்கி விட்டாரே
நடிகர் அர்ஜுன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல முகங்களை கொண்டவராக இருந்தாலும், தற்போது முதல் முறையாக தொகுப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். இவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது நடைபெற்று முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குகிறார் என்று சொன்னதுமே இவருக்காக பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர். இவருடைய தொகுத்து வழங்கும் திறமையும் தனித்துவமான குணநலன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தீவிரமான அனும பக்தன்
நடிகர் சக்தி பிரசாத்தின் மகன் அர்ஜுன் சர்ஜா. அர்ஜுனுக்கு மூத்த சகோதரர் கிஷோர் ஜர்ஜா இவர் கன்னட படங்களை இயக்கியுள்ளார். அர்ஜூனின் தீவிரமான ஆசை அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று தான். ஆனால் அவருடைய அந்த ஆசை நிறைவேறவில்லை என்றாலும் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்து உள்ளார். தீவிரமான அனுமனின் பக்தரான இவர் சென்னை புறநகர் பகுதியில் அனுமன் கோயிலையும் கட்டியுள்ளார். 35 அடி ஆஞ்சநேயர் சிலை கோயிலுக்காக பிரத்தியோகமாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த அனுமன் சிலை உட்கார்ந்த நிலையில் கம்பீரமாக அமர்ந்து இருப்பதை பார்க்கும்போதே எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 140 டன் எடை கொண்ட அந்த சிலை தான் இந்தியாவிலேயே முதல்முறையாக அமர்ந்திருக்கும் அனுமன் சிலையாக இருந்து வருகிறது.

தீவிரமான அனும பக்தன்
நடிகர் சக்தி பிரசாத்தின் மகன் அர்ஜுன் சர்ஜா. அர்ஜுனுக்கு மூத்த சகோதரர் கிஷோர் ஜர்ஜா இவர் கன்னட படங்களை இயக்கியுள்ளார். அர்ஜூனின் தீவிரமான ஆசை அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று தான். ஆனால் அவருடைய அந்த ஆசை நிறைவேறவில்லை என்றாலும் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்து உள்ளார். தீவிரமான அனுமனின் பக்தரான இவர் சென்னை புறநகர் பகுதியில் அனுமன் கோயிலையும் கட்டியுள்ளார். 35 அடி ஆஞ்சநேயர் சிலை கோயிலுக்காக பிரத்தியோகமாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த அனுமன் சிலை உட்கார்ந்த நிலையில் கம்பீரமாக அமர்ந்து இருப்பதை பார்க்கும்போதே எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 140 டன் எடை கொண்ட அந்த சிலை தான் இந்தியாவிலேயே முதல்முறையாக அமர்ந்திருக்கும் அனுமன் சிலையாக இருந்து வருகிறது.

அர்ஜுன் கூறிய செய்தி
அர்ஜுன் நடித்து பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. பல அதிரடியான திரைப்படங்களில் நடித்து அனைவரையும் அசர வைத்ததால் தான் இவருக்கு ஆக்சன் கிங் என்று பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது தொகுப்பாளராக சர்வைவர் நிகழ்ச்சியில் இவரைப் பார்த்ததும் ரசிகர்கள் குதூகலித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் தான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், தன்னோடு தொடர்பு இருந்தவர்களையும் பரிசோதனை செய்யக் கோரியும் அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஜூனின் அறிவுரை
அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாக பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். ராம பக்த ஹனுமான் ஜெய் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இந்த போஸ்ட் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் விரைவில் நலம் பெற்று மீண்டும் வா தலைவா என்று இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications