Arjun: மேலிடத்திற்க்கு ஜால்ரா போட முடியாது! என்கிட்ட பணமும் இல்ல! இதனால்தான் அரசியலுக்கு வரல! அர்ஜுன் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என பெயர் வாங்கிய நடிகர் அர்ஜுன், அரசியல் நுழைவு குறித்து தன்னிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய தைரியமான பதிலை அளித்துள்ளார். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியலுக்கு தான் ஏன் தயங்கினார் என்பதை உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

அர்ஜுன் பகிரங்க பேச்சு
"நிறைய பேர் என்னை அரசியலுக்குக் கூப்பிட்டு இருக்காங்க, ஆனா நான் போகல. அரசியலுக்கு ஒரு வேறு விதமான மனநிலை வேண்டும்" என்று அவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். "இப்போது இருக்கிற அரசியலுக்கு எல்லாம் பணம்தான். நான் ஏதாவது பிரச்சனைனா தட்டி கேக்கணும்னு அரசியலுக்கு வந்தா அது நடக்காது. சில விஷயங்கள் பேச கூடாதுன்னு சொல்லுவாங்க, மேலிடம் சொல்றதுக்கு எல்லாம் ஜால்ரா போடணும், அது நம்மளால் முடியாது" என்று அரசியலின் உண்மைச் சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே மாதிரி பணம் இருந்தால்தான் இங்க ஜெயிக்க முடியும், அந்த அளவுக்கு என்கிட்ட பணம் இல்லை அதனால்தான் நான் அரசியலுக்கு வரல" என்று அர்ஜுன் உறுதியாகப் பேசியுள்ளார்.
அர்ஜுனின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் அர்ஜுன். 90-களில் இவருடைய படங்கள் அதிகமாக தேசப்பற்று மிக்கதாக இருக்கும். தமிழ்நாட்டுக்காகவும் இந்தியாவுக்காகவும் போராடும் கதாபாத்திரங்களில் அவர் அதிகமாக நடித்துள்ளார், அதனால் பலருக்கும் அவர் பிடித்த நடிகராக இருந்தார்.
அர்ஜுனின் வாழ்க்கையில் 'ஜென்டில்மேன்', 'ஜெய்ஹிந்த்', மற்றும் 'முதல்வன்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட்அடித்தன. குறிப்பாக, 'முதல்வன்' திரைப்படம் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 'ஜென்டில்மேன்' திரைப்படத்திலும் ஏழைகளுக்காகவும் படிப்பிற்காகவும் உதவிகளைச் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டப்பட்டார்.
குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
அர்ஜுன் நடிகை நிவேதிதாவை (ஆஷா ராணி என்ற பெயரில் கன்னடத்தில் நடித்தவர்) காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ஏற்கனவே 'பட்டத்து யானை' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். சமீபத்தில்தான் ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் திருமணம் நடந்தது.
சர்ச்சைகளற்ற வாழ்க்கை
அர்ஜுன் திரைத்துறை பயணத்தில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காதவர் என்பது அவருடைய மிகப் பெரிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு வரும் வாய்ப்பைப் பணம், ஜால்ரா போடும் மனநிலை போன்ற காரணங்களால் தவிர்த்ததாக அர்ஜுன் பகிரங்கமாகப் பேசியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
Blast Movie Review: "அர்ஜுனுக்கு கம்பேக்".. பிளாஸ்ட் கதை இதுதான்! இந்த இடம் சூப்பர்.. ப்ளூசட்டை மாறனே பாராட்டிட்டாரே! -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications