கர்ப்பம் ஆகாமல் இருப்பதற்கு "அந்த” இன்ஜெக்ஷன்.. "அப்படியெல்லாம்” பண்ணனும்.. அர்ணவின் புது ஆடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகர் அர்ணவ் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னோடு பழகிய பெண் மருத்துவரிடம் ஆபாசமாக பேசிய ஆடியோவை திவ்யா வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தனக்கு ஏற்கனவே வற்புறுத்தலின் காரணமாக கல்யாணம் ஆகிவிட்டது என்றும், நான் இப்போது அந்த திவ்யாவை பிரிந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அர்ணவ் பேசியிருக்கிறார்.

அதோடு தனது வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்க பொண்ணு பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்றும், திருமணத்திற்கு பிறகும் நான் உன்னோடு தொடர்பில் இருப்பேன் என்றும் மேலும் ஆபாசமாகவும் அந்த பெண்ணிடம் பேசியிருக்கிறார்.

இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் சின்னத்திரை பிரபலங்களான திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்ப பிரச்சனை தெரிஞ்சது தான். சில மாதங்களுக்கு முன்பு அர்ணவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். பிறகு திவ்யா கர்ப்பமானதும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குடும்ப பிரச்சனை காரணமாக திவ்யா கண்ணீரோடு வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Actor Arnaav asks his girlfriend to give him an injection to prevent her from getting pregnant

அதைத்தொடர்ந்து திவ்யா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணவ் ஜெயிலுக்கு போயிட்டு, ஜாமினில் வெளியே வந்து இப்போது செல்லம்மா சீரியலில் மீண்டும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திவ்யா ஜெயிலுக்கு போயிட்டு வந்த அர்ணவ் இன்னும் திருந்தவே இல்லை என்று அடுத்தடுத்த ஆடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஜெயிலுக்கு போவதற்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் செல்லமா சீரியலில் அர்ணவ் உடன் நடிக்கும் நடிகையோடு இருந்த தொடர்பால் என்னை அடித்து துன்புறுத்தினார் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜெயிலுக்கு போயிட்டு வந்த அர்ணவ் தன்னோடு இன்ஸ்டாகிராம் மூலமாக பழகிய டாக்டர் பெண் ஒருவரிடம் ஆபாசமாகவும், அந்தப் பெண்ணை ஏமாற்றும் விதமாகவும் பேசி இருப்பதாக திவ்யா கூறி இருக்கிறார்.

திவ்யா லேட்டஸ்ட் ஆக வெளியிட்ட ஆடியோவில் அர்ணவ் அந்த டாக்டர் பெண்ணிடம் எனக்கு வீட்டில் கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருக்காங்க. நான் எங்க ஊரு சைடு உள்ள படிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீயும் அதுபோல ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க. இல்லன்னா அது கூட வேண்டாம். நீ சென்னைக்கு பிளாட் எடுத்து தங்கிடு. நான் ஊருக்கு போகும் போது மட்டும் அம்மா அப்பாவுக்காக அந்த பொண்ணு கூட இருக்கிறேன்.

பிறகு எனக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொல்லி நான் உன் கூட தான் இங்க தங்கி இருப்பேன். நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம். அப்படி இருக்கும் போது நீ கர்ப்பம் ஆகிற கூடாது. ஏன்னா அதனால நமக்கு நாளைக்கு பிரச்சனைதான் வரும். நீயும் நானும் சந்தோஷமா இருக்கணும். அதுக்கு கர்ப்பமா ஆகாம இருக்குறதுக்கு இன்ஜெக்ஷன் இருக்குல்ல அதை நீ போட்டுக்கோ.

நீ டாக்டர் தானே உனக்கு தெரியும்ல..? நீ ஒருமுறை அந்த இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டா மூன்று மாதங்களுக்கு கர்ப்பமாக மாட்டாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் என்று அர்ணவ் சொல்ல, அதற்கு அந்த பெண் இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க, இதெல்லாம் என் நண்பர்கள் சொல்லி இருக்காங்க என்று அர்ணவ் சமாளிக்கிறார். மேலும் அவர் உனக்கு பீரியட்ஸ் டைமில் வயிறு வலிக்குமா என்று கேட்க அந்த பொண்ணு அவ்ளோ இருக்காது எதுக்கு என்று கேட்கிறார்.

இல்ல நாம ஒண்ணா இருக்கும்போது நீ என்கிட்ட பீரியட்ஸ் என்று சொல்லி தள்ளி போயிறக்கூடாது இல்ல அதுக்கு தான் கேட்கிறேன். உனக்கு வலி அதிகமா இருந்தா நான் தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா வலி கம்மியா தான் இருந்துச்சுன்னா எனக்கு அப்பவும் வேணும். நாம எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்றும் இன்னும் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு ஆபாசமாகவும் அந்த ஆடியோவில் பேசப்பட்டு இருக்கிறது.

Actor Arnaav asks his girlfriend to give him an injection to prevent her from getting pregnant

இதுகுறித்து திவ்யா பேசுகையில் நான் அர்ணவை காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிட்டேன். ஆனால் எனக்கு அன்ஸிதா உடன் அவன் ஆரம்பத்தில் பேசிய ஆடியோ எல்லாம் கேட்டு ரொம்பவே மனசு உடைஞ்சு போயிட்டேன். அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருக்கிறத பார்த்து நான் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். அதனால இந்த பொண்ணு எனக்கு இந்த ஆடியோவை அனுப்பும்போது முதலில் பெரியதா எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆடியோவா வர வர அதைக் கேட்டு தான் இனி இவனை சும்மா விட கூடாதுன்னு முடிவு எடுத்தேன்.

இப்படியே இவனை விட்டுட்டு இருந்தா இன்னும் எத்தனை பெண்களோட வாழ்க்கையே சீரழிக்க போறேன்னு தெரியாமத்தான் நான் இந்த விஷயத்தை மீண்டும் மீடியாவுக்கு முன்னாடி கொண்டு வந்து இருக்கேன். இந்த ஆடியோ நான் அடிக்கடி வெளியிட்டு கொண்டு இருப்பதால் அவன் என்னை தப்பானவள் என்று எடிட் செய்து ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு நிரூபிக்க பார்க்கிறான் என திவ்யா கோபத்தோடு பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+