Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலையாரிடம் கையேந்தி நின்ற அருண் விஜய்.. ஸ்ரீகாந்த் பற்றி சொன்ன வார்த்தை, தனுஷ் பற்றி வியப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அருண் விஜய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். ஆலயத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது தான் நடித்து முடித்த ரெட்டை தல மற்றும் இட்லி கடை படங்கள் பற்றி பேசி இருந்தார். அப்போது செய்தியாளர்கள் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி கேட்ட கேள்விக்கு எதிர்பார்க்காத ரியாக்ஷனை அருண் விஜய் கொடுத்திருக்கிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள வகையில் பார்த்து பார்த்து கதை தேர்வு செய்து வருகிறார். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய் இன்று திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்து இருக்கிறார்.

Arun Vijay Srikanth

அங்கு கிரிவலம் செய்யும்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்களுடன் சாந்தமாக நடந்து கொண்டிருந்தார். பிறகு தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். அப்போது அண்ணாமலையார் திடீரென இங்கு வரணும் என்று சொல்லிவிட்டார் அதனால் நானும் கிளம்பி வந்து விட்டேன். வேறு எந்த விஷயமும் இல்ல. ரெட்டை தல மற்றும் இட்லி கடை படங்கள் சூட்டிங் முடிஞ்சு ரிலீசுக்கு ரெடியா இருக்கு. அந்த நேரத்தில் கோவிலுக்கு வரணும் போல இருந்துச்சு அதனால தான் இங்க வந்தேன்.

இங்க வந்ததும் எனக்கே பெரிய மனநிறைவு கிடைத்திருக்கிறது. அத்துடன் இரண்டு படங்களும் வெவ்வேறு பாணியில் உருவான படங்கள் என்பதால் ரசிகர்களுக்கு நல்ல திரை அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் நடிகர் தனுசு உடன் இட்லி கடை படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு தனுஷுடன் நடித்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷம். அவருடைய ராயன் படத்தை பார்த்து எப்படியாவது அவருடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் அவர் உடன் நடிப்பது மிஸ் ஆனாலும் எனக்கு இட்லி கடை படத்தில் வாய்ப்பு கிடைத்ததற்கு ரொம்ப சந்தோசம் தான்.

இட்லி கடை படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது. வணங்கான் படத்தில் நடித்து முடித்துவிட்டு திருமண திருவண்ணாமலையாரை பார்க்க வந்தேன். ஒரு வருடம் ஆகிவிட்டது இப்போது மீண்டும் வந்திருப்பது மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என்று பேசி இருந்தார். அப்போது போதை பொருள் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த அருண் விஜய் இடம் கேட்கப்பட்டது. அதற்கு அதை பற்றி நான் பேச விரும்பவில்லை ப்ளீஸ் என்று சொல்லி இருந்தார்.

பிறகு தனுஷ் படங்களை இயக்கப் போகிறேன் என்று உங்களிடம் எதுவும் சொன்னாரா? என்று கேட்கப்பட்டபோது அவர் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் ஏதாவது எழுதிக் கொண்டே தான் இருப்பார். கதை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவரை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். நடித்து முடித்ததும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பார் என அருண் விஜய் பேசி இருக்கிறார்.

நேற்றிலிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் நடிகர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்று கேள்விகளும் எழுந்து வருகிறது. அதுபோல ஸ்ரீகாந்த் உடன் இன்னும் ஒரு சில நடிகர்களின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் எந்த விஷயத்தை பற்றி பேச விரும்பவில்லை என்று அருண் விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+