சாப்பிட போன இடத்துல.. என் குழந்தைகளிடம் அந்த பெண் கேட்ட கேள்வி? நொறுங்கிட்டேன்! அரவிந்த்சாமி எமோஷனல்
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்த அரவிந்த்சாமி தனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தன்னுடைய உடல் மாற்றத்தை வைத்து பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளிடம் தன்னை கிண்டல் செய்த விதத்தால் தான் அடைந்த வேதனை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அரவிந்தசாமி வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி சின்ன திரையிலும் பலருக்கும் பரிச்சயம் ஆனவர்தான். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட பெரிய விபத்தில் அவர் உயிர் பிழைத்து பிறகு பல கஷ்ட காலங்களை அனுபவித்து இப்போது மீண்டும் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் தன்னால் மறக்க முடியாத நிகழ்வு என்று ஒரு நிகழ்வை பிரபல சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் அரவிந்த்சாமி பேசுகையில், நான் குண்டாக சொட்டையாக இருந்ததை மறைக்க விரும்பவில்லை. அதற்கான காரணம் அப்போது என்னுடைய உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்தது தான். அதற்காக நான் நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். இதனை கிண்டல் செய்யும் விதமாக என்ன நடக்கிறது என்று தெரியாமலே சிலர் என்னை பற்றி தவறாக மீம்ஸ் போட்டு இருக்கலாம்.
அதுபோல ஒரு சிலர் தெரிந்துகூட என்னைப் பற்றி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அதை நான் இங்கு நியாயப்படுத்த விரும்பவில்லை. நம்மை பற்றி வரும் விமர்சனங்களையும் அவமானங்களையும் நான் எப்படி கையில் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. என்னைப் பற்றி யாரும் கிண்டல் செய்வதில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதை பார்த்து நான் வருத்தப்படவும் இல்லை.
அதுபோல எப்போதுமே நான் அழகாக இருக்கிறேன் என்று நினைத்தது இல்லை. அதனால் நான் அசிங்கமாக இருக்கிறேன் என்றும் சொல்லவில்லை. அதுபோல என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என்னுடைய மனதை மிகவும் பாதித்தது. அதாவது ஒரு முறை நான் ஸ்ரீலங்காவிற்கு என்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா போயிருந்தேன். அப்போ என்னுடைய குழந்தைகள் ரொம்பவே குட்டி பிள்ளைகளாக இருந்தாங்க.
நாங்க ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக போயிருந்த போது நான் சாப்பாட்டை எடுக்க சென்றிருந்தேன். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் ஒருவர் என்னுடைய குழந்தையை பார்த்து உன்னுடைய அப்பாவை குறைவாக சாப்பிட சொல்லு என்று கிண்டல் செய்தார். இது கண்டிப்பா என்னை பெருசா பாதித்திருக்காது. ஆனால் என்னுடைய குழந்தையை கண்டிப்பா பாதித்திருக்கும். நீங்கள் என்னை பற்றி எது வேண்டும் என்றாலும் பேசலாம்.
அதை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வேன். ஆனால் குழந்தை அப்படி கிடையாது அதனால மனிதர்கள் அடுத்தவர்களின் நிலைமையை அறிந்து செயல்பட வேண்டும் என்று அந்த பேட்டியில் அரவிந்த்சாமி பேசியிருக்கிறார். அதே நேரத்தில் அரவிந்த் சாமி ஒரு பீனிக்ஸ் பறவை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது சினிமாவில் அவர் அறிமுகமான காலகட்டத்தில் அவர்தான் இளம் பெண்களின் கனவு நாயகன். சாக்லேட் பாய் என்று பலரும் அவரை அழைத்து வந்தனர். புகழின் உச்சத்தில் இருக்கும்போது தாலாட்டு என்ற திரைப்படத்தில் நடித்த அரவிந்தசாமி அந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் அவருக்கு பெயர் கிடைக்காததால் அந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அந்த நேரத்தில் தான் அரவிந்த்சாமிக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் முதுகு தண்டில் அடிபட்டதால் அவரால் நடக்க முடியாமல் போனது. அதற்காக அவர் பல மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால் குண்டாகி முடி எல்லாம் கொட்டி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். அந்த நேரத்தில் தான் அரவிந்த்சாமியை பலர் உருவ கேலி செய்து இருந்தனர்.
அதனால் மன அழுத்தத்தில் இருந்த அரவிந்த்சாமி ஜிம்மில் பல மணி நேரம் இருந்து உடற்பயிற்சி செய்து கடுமையான டயட் இருந்து படிப்படியாக தன்னை மாற்றி தான் தனி ஒருவன் படத்தில் மிரட்டனாக வில்லனாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்த நிலையில் அவருடைய மனதில் வடுவாக இருந்த விஷயத்தை பகிர்ந்திருக்கும் வீடியோவிற்கு ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications