நான் Sugar Daddy இல்லை.. கமிஷனர் பொண்ணுதான் என் அழகை பார்த்து பழகினது! பப்லு பிரித்திவிராஜ் ஓபன்
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் சில வருடங்களுக்கு முன்பு தன்னைவிட வயதில் குறைந்த பெண் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்வதாகவும் அறிவித்திருந்தார். இப்போது அந்த பெண்ணுக்கு வேறு திருமணம் நடந்து இருக்கும் நிலையில் அந்த பெண் பற்றி பப்லு பிரித்திவிராஜ் பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சினிமாவில் ஒரு சிலருடைய குடும்ப வாழ்க்கை பற்றிய செய்திகள் பலருக்கும் தெரிந்ததாகவே இருக்கிறது. திறந்த புத்தகமாக தங்களுடைய திருமண வாழ்க்கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். பப்லு பிரித்திவிராஜ் தன்னுடைய நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் பப்லுவின் மகன்
மகனின் நிலைமையை பார்த்து மன வருத்தத்தில் சில வருடங்களாக பப்லு சினிமாவை விட்டு விலகி இருந்தார். பப்லு குழந்தை நட்சத்திரமாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிறகு வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தன்னுடைய மகனின் நிலையைப் பார்த்து அதற்கு பிறகு சினிமா மற்றும் சீரியல் என்று எல்லாவற்றையும் விட்டு விலகி இருந்தார்.
சினிமாவை விட்டு விலகல்
ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருந்தார். இந்த நிலையில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன் மகன் வயதை விட குறைவான வயதுடைய ஒரு பெண்ணைத்தான் காதலிப்பதாகவும் அவரை தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். அப்போது பப்லுவும், அந்த பெண்ணும் பேசிய பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வந்தன. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் பப்லுவிடம் இருந்து தான் பிரிந்து விட்டேன் என்பது போன்று சோசியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார்.
பப்லு காதலி பிரிவு
இதனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அடுத்த சில மாதங்களில் அந்தப் பெண் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்போது நானும் பப்லுவும் பிரிந்து விட்டோம். அவர் வாங்கிக் கொடுத்த பொருட்களை எல்லாம் அவரிடம் கொடுத்து விட்டேன் என்று கூறியிருந்தார். அதற்கு பிறகு சிலர் Youtube சேனல்களில் பப்லு பற்றி பல வதந்திகளை பரப்பி வந்தனர். இந்த நிலையில் பப்லு இதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பப்லு விளக்கம்
பப்லுவை சிலர் சுகர் டாடி (sugar daddy) என்று அழைத்து வந்தனர். அதுகுறித்து பப்லு பேசும்போது, "பாவம் யாருக்கும் சுகர் டெடியின் அர்த்தம் தெரியவில்லை. அப்போ என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஜீரோ. நான் ஒரு சின்ன அப்பார்ட்மெண்டில் 20 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து இருந்தேன். அப்படி இருக்கும்போது தான் அந்தப் பெண்ணை நான் சந்தித்தேன். அவங்க அப்பா ஆந்திராவில் போலீஸ் கமிஷனர். அவங்க அம்மா ஒரு லாயர்.
அந்த பொண்ணு கோடீஸ்வரி. அவங்க என் காசுக்காக வரல. என் அழகுக்கும், அறிவுக்கும் தான் வந்தாங்க. நான் நிறைய காசு வச்சு பணத்தால் அந்த காதலை வாங்கி இருந்தால்தான் அதற்கு சுகர் டாடி என்று அர்த்தம்" என பப்லு விளக்கம் கொடுத்திருக்கிறார். இதுவும் இப்போது இணையத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தக் லைஃப் படத்தில் கமல் சுகர் டாடியாக நடித்து, திரிஷாவுடன் உறவை வைப்பது போல காட்சியிருக்கலாம் என பலரும் கூறி வரும் நிலையில் இந்த சுகர் டாடி பற்றிய பேச்சு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications