பப்லு பிரித்விராஜை பிரிந்த அவரின் காதலி ஷீத்தல்!? அவரே கொடுத்த ஹிண்ட்.. காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் பப்லு பிரித்திவிராஜ் தன்னைவிட வயதில் குறைந்த ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு பப்லு மற்றும் ஷீத்தல் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். அதோடு சமூக வலைத்தளத்திலும் இருவரும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் ஷீத்தல் மற்றும் பப்லு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த வருடத்தில் எல்லோரையும் வியக்க வைத்த திருமணம் என்றால் அது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம்தான் சினிமா துறையில் இவர்களுடைய திருமணத்தைப் பற்றி பேசாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருவருக்கும் திருமணமா என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. அதிலும் இவர்களுடைய திருமண புகைப்படத்தை பார்த்த அதிகமான ரசிகர்கள் அதை மீம்ஸ்களாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
இமானைத் தொடர்ந்து கனகா பிரச்சனையை கையில் எடுத்த நடிகை .. நேரடியாக சந்தித்து சொன்ன பகீர் தகவல்
அதைத் தொடர்ந்து பெரிய அளவில் சினிமா துறையில் பேசப்பட்டது என்றால் நடிகர் பப்லு பிரிதிவிராஜ் தன்னைவிட முப்பது வயது குறைந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து விட்டார் என்று பரவிய செய்திதான். அதைத் தொடர்ந்து பப்லு நாங்கள் திருமணம் எல்லாம் செய்து கொள்ளவில்லை. நான் இந்த பெண்ணை காதலிப்பது உண்மைதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த பெண் என்னை சந்தித்தார்.
பிறகு இருவருக்கும் பிடித்து போனது அதனால் காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாக பேசி இருந்தார். அதோடு தான் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆட்டிசம் பாதித்த தன்னுடைய மகன் தன்னுடைய முதல் மனைவியோடு தான் வாழ்ந்து வருகிறார். நான் தனியாக இருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு துணை வேண்டும். இப்போது முறைப்படி என்னுடைய முதல் மனைவியிடம் இருந்து நான் விவாகரத்து வாங்கி விட்டேன்.
சாக்லேட்டுக்காக நடித்த சீன்.. கடைசியில் விக்ரமன் சொன்ன மாதிரியே ஆகிட்டு.. மனம் திறந்த நடிகை மோகினி
அவருக்கு நான் ஷீத்தலை திருமணம் செய்யப் போவதும் தெரியும்.. முதல் மனைவியை தோழியாக பல வருடங்கள் பார்த்து பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் நட்பு மட்டும்தான் இருந்ததே தவிர காதலோ கணவன் மனைவி என்ற பந்தமோ இல்லை. அதனால் தான் நான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பேட்டியில் பேசியிருந்தார்.
இப்படியாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்திலும் பப்லு பிரித்திவிராஜ் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுபோல அவர் காதலித்த பெண் ஷீத்தலும் ஆக்டிவாக இருக்கிறார். இருவரும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷீத்தல் மற்றும் பப்லு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கின்றனர்.
மூன்று புகைப்படங்கள் மட்டும்தான் பப்லுவோடு எடுத்த புகைப்படத்தை சீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கிறார். அதிலும் பப்லு பக்கத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தான் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மட்டும் தான் டெலிட் ஆகவில்லை. அதோடு தற்போது ஷீத்தல் வெளியிட்ட வீடியோவிற்கு நீங்கள் பிரிந்து விட்டீர்களா? தனியாகத்தான் வாழ்ந்து வருகிறீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு ஷீத்தல் லைக் கொடுத்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் பிரித்திவிராஜ் தன்னை பற்றி வந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் ஷீத்தலை கப் கேக் என்று கொஞ்சுவதும், வானத்தில் ப்ரபோஸ் செய்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டதும் பலருடைய கோபத்தை அதிகரிக்க வைத்திருந்தது.
இந்த நிலையில் இப்போது இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்றதும் நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனாலும் எது எப்படியோ இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும் பிறகு கொஞ்சி கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications