சாக்லேட்டுக்காக நடித்த சீன்.. கடைசியில் விக்ரமன் சொன்ன மாதிரியே ஆகிட்டு.. மனம் திறந்த நடிகை மோகினி
சென்னை: 90ஸ் நாயகிகளில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நடிகை மோகினி தன்னுடைய சினிமா அனுபவங்கள் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த மோகினி தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் புதிய மன்னர்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற கட்டும் சேலை மடிப்பில் என்ற பாடல் உருவான விதம் குறித்து மோகினி பேசியிருக்கிறார்.
ஒரு சில நடிகைகள் எப்போதும் ரசிகர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றனர். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளின் ஒருவர்தான் மோகினி. இவருடைய கண்கள் வித்தியாசமான நிறத்தில் இருப்பதாலேயே இவரை பார்த்தவர்கள் எளிதாக அடையாளம் கண்டு விடுவார்கள். அதுபோல இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவருடைய கண்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது.

மகாலட்சுமி என்ற பெயரைக் கொண்ட மோகினி சினிமாவுக்காக தான் மோகினி என்ற பெயரை மாற்றி இருந்தாராம். மோகினிக்கு முதல்முறையாக ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ட்ரான்ஸ்பர் படத்தில் அக்ஷய் குமார் உடன் கதாநாயகியாக பாலிவுட்டிலும் மோகினி நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்களில் நடிக்கும் போதெல்லாம் மோகினியின் வயது 15 தானாம்.
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது விடுமுறை காலகட்டத்தில் தான் ஈரமான ரோஜாவே திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு 5 ஸ்டார் சாக்லேட் கொடுத்து இவரை எளிமையாக நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று கலகலப்பாக பேட்டியில் மோகினி பேசியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த மோகினி பிறகு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

இப்போது இந்த தம்பதியினருக்கு அனிருத் மற்றும் ருத்ராட்ஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதுபோல மோகினி சினிமாவில் மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் காதல் பகடை, ராஜராஜேஸ்வரி ஒரு பெண்ணின் கதை என பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு பேட்டி ஒன்றில் மோகினி பேசியிருக்கிறார்.
அப்போது நான் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே யோசித்து யோசித்து நடித்தது என்றால் அது புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கட்டும் சேலை மடிப்பில",என்ற பாட்டில்தான். அந்தப் பாட்டு எனக்கு வேண்டாம் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டே இருந்தேன். அந்த பாட்டு சூட்டிங் பொள்ளாச்சிக்கு செல்வதற்கு முன் முந்தைய நாள் வரைக்கும் விக்ரமனிடம் இது பற்றி நான் பேசினேன். ஆனால் அவர் நீங்கள் போய் பண்ணுங்க நல்லா இருக்கும் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்.
எனக்கு அந்த நேரத்தில் இந்த மாதிரி கிராமத்து உடை உடுத்தி டான்ஸ் ஆடவும் தெரியாது. அது எனக்கு செட்டாகுமா என்றும் தெரியாது. அதனால் அது வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தப் பாட்டுக்கு சூட்டிங்கில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது கூட எனக்கு அந்த டான்ஸ் வராமல் நான் ஏதோ பரதநாட்டியம் ஆடுவது போன்று ஏனோ தானோ என்று தான் ஆடி முடித்தேன். ஆனால் பாட்டு வெளியான பிறகு தான் எனக்கு விக்ரமன் சொன்னது தான் சரி என்று தெரிந்தது.
என்னுடைய கண்ணை பார்த்து பலரும் அழகாக இருக்கிறது என்று சொன்னாலும் நான் இந்த கிராமத்து பாடலில் என்னுடைய கண் இதற்கு செட்டாகுமா என்று தான் பயந்தேன். ஆனால் கடைசியில் அவ்வளவு அழகாக அந்த பாட்டு இருந்தது என்று அந்த பேட்டியில் மோகினி பேசியிருக்கிறார். இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் 'கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேனே' பாடல் இடம் பிடித்து இருக்கும். இந்தப் பாடலை பிடித்தவர்கள். அதில் மோகினியின் டான்ஸ் உங்களை கவர்ந்ததா? இல்லையா? என கமெண்டில் சொல்லுங்கள்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே












Click it and Unblock the Notifications