ஆனந்தம் படத்தில் வடிவேலு “அந்த" கேரக்டரில் நடிக்க வேண்டியது.. இதனால் தான் மாறிடுச்சு! பிரபலம் ஓபன்
சென்னை: நடிகர் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா போன்ற பல நடிகர்களின் நடிப்பில் வெற்றி அடைந்த ஆனந்தம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தார் என்றும் அவர் அந்த திரைப்படத்தில் நடிக்காததால் பாவா லட்சுமணன் தான் நடித்தது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்து விட முடியாது. குடும்ப திரைப்படத்தை விரும்பும் ரசிகர்களின் எவர்கிரீன் திரைப்படங்களில் ஒன்றான இந்த திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படம் ஆகவும் இருக்கும். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பல இப்போதும் பலருடைய whatsapp ஸ்டேட்டஸ்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் இந்த படம் நடிகர் மம்மூட்டியின் தமிழ் திரைப்படங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மம்மூட்டி ஒரு இடத்தில் தான் பணம் சேர்த்து வைக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் "உண்மை தெரிஞ்சா நீங்க தாங்கிக்கிட மாட்டீங்க" என்று பேசும் வசனம் இப்ப கூட பல மீம்ஸ்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
அதுபோல இந்த திரைப்படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ்,தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள். அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்தது தான் விஜய் டிவியில் கூட பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடங்கப்பட்டது என்று சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே", "கோகுலத்தில் ராதை வந்தாளாம்", "கல்யாண வானில் போகும் மேகம்", "பல்லாங்குழியின் வட்டம் கேட்டேன்", "என்ன இதுவோ" போன்ற பாடல்கள் பல கல்யாண வீடுகளில் கலகலப்பாக ஒலிக்கப்பட்டு வருகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ரீல்ஸ்களில் கூட இந்த பாடல்களும் இடம் பிடித்திருக்கிறது.
அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் காதல், சென்டிமென்ட், காமெடி என்று கலவையான எல்லா காட்சிகளும் இடம் பிடித்திருக்கும். இந்த திரைப்படத்தை ஆர்பி சௌத்ரி தயாரித்து இருந்த நிலையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டது. இந்த பட அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாவா லட்சுமணன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அவர் அதில் பேசுகையில் இந்த திரைப்படத்தில் திருடன் கேரக்டரில் பாவா லட்சுமணன் நடித்திருப்பார். இரவு நேரத்தில் வீட்டிற்குள் ஓடு பிரித்து உள்ளே நுழைந்து அங்கே மாட்டிக் கொள்வது பிறகு அந்த வீட்டிலேயே வேலைக்காரனாக இருப்பது போன்ற நடிப்பில் தத்துரூபமாக நடித்திருப்பார். அதிலும் அப்பாஸ் டெல்லியில் இருந்து போன் பண்ணும் போது எல்லாரிடமும் போனில் பேசுவார். ஆனால் நமக்கு போன் வருமா என்று அவர் ஏக்கமாக பார்க்கும் காட்சிகள் அவருடைய நடிப்பின் வெளிப்பாடாக இருந்தது.
ஆனால் இந்த காட்சிகளில் நடிக்க முதலில் வடிவேலுவிடம் தான் பேசப்பட்டது என்று பாவா லட்சுமணன் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், ஆனந்தம் படத்தில் முதலில் வடிவேலு தான் நடிக்க இருந்தார். பிறகு அவர் 20 நாட்களுக்கு மட்டும் கால் சீட்டு கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் இந்த கேரக்டர் அதிக நாட்கள் இருக்கும் என்பதால் 20 நாள் கால் சீட்டு போதாது என்று இயக்குனர் சொல்லிவிட்டாராம்.
அதற்குப் பிறகு விவேக், சார்லி போன்ற பலரிடம் பேசியிருக்கிறார்கள் கடைசியில் சார்லி இடம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சார்லி விஜய் படம் நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஐந்து நாள் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார். அந்த நேரத்தில் இயக்குனர் என்னை நடிக்க சொல்லி விட்டார். நான் முதலில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.
அதற்கு தயாரிப்பாளர் நான் தானே என்னுடைய பணத்தை போட போறேன் நானே சொல்லுறேன் நீ போய் நடி என்று சொன்னார். அதற்கு பிறகு இந்த படத்தில் நடித்தேன். பிறகு யார் நடிக்கப் போறாங்க என்று மம்மூட்டி கேட்டார். அப்போது அவரிடம் இந்த படத்தில் இந்த மேனேஜர் நடிக்கப் போகிறார் என்று சொன்னதும் அவர் என்னை பார்த்தார் என்னை பார்த்து விட்டு இவருக்கு வேற ஒரு காட்சியும் கூட வைத்து விடலாம் என்று சொல்லிவிட்டார்.
பிறகு அப்பாஸ் டெல்லியில் இருப்பார் அங்கிருந்து போன் பண்ணுனதும் எல்லாரும் போனில் அவரிடம் பேசுவார்கள் அந்த நேரத்தில் நான் எனக்கு போன் கிடைக்குமா என்று ஆர்வத்தோடு காத்திருப்பேன் அந்த காட்சியில் நடித்தேன். அதை பார்த்ததும் மம்மூட்டி என்னை பாராட்டினார். அதோடு இன்னும் கொஞ்சம் பயம் கலந்து நடித்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி இருந்தார். நானும் அதுபடி தான் அந்த படத்தில் நடித்திருந்தேன் என்று பாவா லட்சுமணன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications