தனுஷ் மாதிரி, விஜய் மாதிரி வேண்டாம்.. மேடையில் நடிகர் பாக்கியராஜ் பதிலடி.. காரணம் இதுதானாம்
சென்னை: இயக்குனர் பாக்கியராஜ் சமீபத்தில் நடைபெற்ற ரங்கோலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மற்றும் தனுஷ் குறித்து எடுத்துக்காட்டோடு பேசி இருக்கிறார்.
அதில் ரங்கோலி திரைப்படத்தின் பாடல்கள் பார்க்கும்போது தனக்கு தன்னுடைய ஃபிளாஷ்பேக் நிறைய நினைவுக்கு வருவதாக கூறி இருக்கிறார்.

அதோடு தன்னுடைய பள்ளி காலங்களில் தான் எந்த அளவிற்கு சேட்டை செய்தேன் என்பது பற்றியும் பாக்கியராஜ் அதில் பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகராகவும் இயக்குனராகவும் பல வருடங்களாக சினிமா துறையில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் தற்போது சின்ன திரையிலும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாக்கியராஜ் ரங்கோலி திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய பள்ளி கால கதையை பகிர்ந்து இருக்கிறார். அதில் பள்ளியை நினைவுபடுத்தும் படங்கள் எல்லாமே இனிமையானது தான். நான் படிக்கும்போது வாத்தியாரை பாடமே எடுக்க விட மாட்டேன். ஏதாவது ஒன்னு பண்ணிகிட்டே இருப்பேன். ஆசிரியர்களுக்கு என் மீது கோபம் வரும்.
என்னுடைய வகுப்பில் மாணவர்கள் தனியாகவும் மாணவிகள் தனியாகவும் தான் அமர்ந்திருப்போம். திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்து ஆசிரியர் நான் சேட்டை செய்து கொண்டிருப்பதால் என்னை மாணவிகள் பக்கத்தில் உட்கார வைத்து விட்டார். அவர் எனக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்தார். ஆனால் அது எனக்கு சவுகரியமாக இருந்தது என்று அவருக்கு தெரியவில்லை.
அப்போது மாணவிகள் கொண்டுவரும் தின்பண்டங்களை எல்லாம் ஜாமென்ட்ரி பாக்சில் இருக்கும் அதை எடுத்து சாப்பிட்டு விடுவேன். மாணவிகளும் தின்பண்டங்களை மறைத்து வைத்திருப்பார்கள். அதனால் அதை புகார் சொல்லவும் முடியாது. அந்த காலம் ஜாலியா இருக்கும்.
பிறகு நான் மாணவிகளையும் தொந்தரவு செய்வதை தெரிந்துகொண்ட ஆசிரியர் உன்னை எங்க உட்கார வைத்தாலும் நீ எல்லாரையும் தொல்லை பண்ணுவடா என்று நொந்து கொண்டார். அதுபோல இந்த படத்தை எந்த டைப்பில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் படத்தில் நடிப்பவர்களை பார்த்து தனுஷ் மாதிரி, விஜய் மாதிரி என்று இங்கு பேசிய சிலர் சொன்னார்கள்.
அதற்கு நான் அந்த படத்தில் நடித்த பையனிடம் நீ நீயாக இரு என்றுதான் சொல்லுவேன். அந்த மாதிரி இந்த மாதிரி என்று சொல்லும்போது அதை கேட்டு நீ நடிக்கும் போது உன்னை அறியாமல் அவர்களைப் பற்றியது எல்லாம் உன்னில் எதிரொலிக்கும் எனவே அது வேண்டாம். நீ நீயாகவே இரு என்று அந்த நிகழ்ச்சியில் பாக்கியராஜ் பேசியிருக்கிறார்.
-
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications