மகளின் ரகசிய திருமணம்.. அந்த வேதனையை பார்க்க முடியல.. குடும்ப விஷயத்தை மனம் திறந்த பாக்கியராஜ்
சென்னை: நடிகர் பாக்கியராஜ் தன்னுடைய மகள் சரண்யா செய்த காதல் திருமணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஆனால் அதற்கு பிறகு அவருடைய பிரசவத்தின் போது தான் அவரை ஏற்றுக் கொண்டது பற்றி நடிகர் பாக்யராஜ் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யாவிற்கு திருமணமாகிவிட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. அவருடைய திருமண புகைப்படங்கள் எந்த இடத்திலும் வெளியாகவில்லை. பாக்கியராஜ் குடும்பத்தினர் தன்னுடைய மகள் திருமணத்தை பற்றி எப்போதுமே பேசவில்லை.

இதனால் இவருக்கு திருமணம் ஆகி விட்டதா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. காரணம் சில மாதங்களுக்கு முன்பு சரண்யா பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் பற்றி பேசியிருந்தார். தனக்கு மகன் பிறந்த பிறகு தன்னுடைய பிசினஸையும் கவனித்துக் கொண்டு குழந்தைகளையும் வளர்த்து வருவது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது, அதுபோல என்னுடைய அப்பாவிற்கு இப்போது பேரன் தான் உலகமாக இருக்கிறார் என்று பேசி இருந்தார்.
இதனால் சரண்யா குழந்தையை தத்தெடுத்து இருக்கிறாரா? அல்லது ரகசிய திருமணம் செய்து வாழ்ந்து வருகிறாரா? அவருடைய கணவரை எந்த இடத்திலும் காட்டவில்லையே ஏன்? என்றெல்லாம் கேள்விகள் வந்த நிலையில் இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் பேட்டி ஒன்றில் பாக்கியராஜ் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசியிருக்கிறார்.
அதில் பாக்யராஜ் பேசுகையில் என்னுடைய மகளின் காதலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஜாதி, மதம், பணம் எல்லாவற்றையும் தாண்டி வேற ஒரு காரணம் இருந்தது. என் பொண்ணு தனியாக போனதால் நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம். ஆனால் அவள் கர்ப்பமாக ஆகிவிட்டார் என்று சொன்னதும் மனசு தாங்க முடியல.
அப்புறம் பூர்ணிமா தான் கூட போனாங்க. பையன் பிறந்து இருக்கான்னு சொன்னவுடனே நான் ஓடிப்போய் ஹாஸ்பிடலில் பார்த்தேன். நான் தான் கையில முதல்ல அவனை வாங்கினேன். இப்போ அவனை பார்க்காமல் என்னால இருக்க முடியாது. அவனுக்கும் நான் இல்லாம இருக்க முடியாது என்று உணர்வு பூர்வமாக அந்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.

ஆனாலும் சரண்யாவின் கணவர் யார் எதற்காக சரண்யாவின் திருமணத்தை பாக்யராஜ் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. பாக்கியராஜ் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்தது எல்லோருக்கும் தெரியும் முதலில் நடிகை பிரவீனாவை பாக்யராஜ் காதலித்து திருமணம் செய்தார்.
ஆனால் பிரவீனா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார். அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்துதான் பூர்ணிமாவை காதலித்து பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மகன் சாந்தனுவும் காதலித்து தான் தொகுப்பாளினி கீர்த்தி என்ற கிகியை திருமணம் செய்திருக்கிறார்.
மகனின் காதலுக்கு சம்மதம் சொன்ன பாக்கியராஜ் மகளின் காதலுக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் கேள்வியாக வலம் வருகிறது. அதே நேரத்தில் சரண்யா ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை முயற்சி எடுத்து இருந்தார் என்ற செய்திகளும் பரவி வருகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications