சோகத்தில் திரையுலகம்: 'ஆச்சி' மனோரமாவின் மகன் பூபதி காலமானார்! இந்த திரைப்படத்திலும் நடித்திருந்தாரே!
சென்னை: தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகை 'ஆச்சி' மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று (23.10.2025) காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான அவர், இன்று காலை 10.40 மணிக்கு இயற்கை எய்தினார்.

மனோரமாவின் மகன் பூபதி
நடிகை மனோரமா 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் கோலோச்சி, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, உலக சாதனை புரிந்தவர். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களையும், போராட்டங்களையும் சந்தித்தவர். பூபதி, மனோரமாவின் ஒரே மகனாவார்.

பூபதி, சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் நடித்த சில வேடங்கள் குறிப்பிடத்தக்கவை. அதுபோல மனோரமா நடித்த "நான் பெத்த மகனே" படத்திலும் பூபதி நடித்திருந்தார். மறைந்த நடிகர் விசுவின் திரைப்படத்தில் தான் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார்.
பூபதியின் குடும்பம்:
பூபதியின் மறைவு, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மனைவி B. தனலெட்சுமி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்: B. ராஜராஜன், B. அபிராமி ,B. மீனாட்சி ஆவார்கள்.
கண்ணீருடன் இறுதி அஞ்சலி:
காலஞ்சென்ற பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. Door No.9/5, நீலகண்ட மேத்தா தெரு, T Nagar இல்லத்தில் வைக்கப்படும். அவரது இறுதிச் சடங்குகள் நாளை 24-10- 2025 மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும்.
தாயின் புகழைத் தாங்கி வாழ்ந்த பூபதி, திரையுலகில் தன் பங்களிப்பைச் செலுத்திச் சென்றுள்ளார். 'ஆச்சி' மனோரமாவின் ரசிகர்களும், திரையுலகினரும் அவரது மறைவுக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications