பிளேட்டை திருப்பிய போஸ் வெங்கட்? ஓட்டலில் முறைத்த அந்த இளைஞர் யார்? மீண்டும் விஜய் பற்றி ஓபன் டாக்
சென்னை: 70 ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை கொடுத்த ஒரு விஷயம் தான் திராவிடம். அதுதான் திராவிட முன்னேற்ற கழகம்.. அதைப் பற்றிய விமர்சனம் வைப்பது மிகவும் தவறு என்று பிரபல நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தன்னுடைய தவெகா முதல் மாநாட்டினை, விக்கிரவாண்டியில் நடத்தியிருந்தார்.. அப்போது மேடையில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக அதேசமயம் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதனால், திமுகவினர் கொந்தளிப்பாகி, விஜய் மீதான விமர்சனங்கள் முன்வைக்க துவங்கினர்.

பிரபல நடிகர்: அதில், பிரபல நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் பதிவிட்டிருந்த கண்டன ட்விட், இணையத்தில் வைரலானது.. அவர் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் "யப்பா... உன் கூடவா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி, வியப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு??? பாப்போம்" என்று பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, "ஒரு தலைவன் என்பவன் தன்னை நம்பி இருக்கும் நபர்கள் அனைவருக்கும் அனைத்தையும் முதலில் கொடுத்து விட வேண்டும். குறிப்பாக படிப்பை கொடுத்து விட வேண்டும், ஒரு தலைவன் தனது தொண்டனை முட்டாளாக வைத்திருக்க கூடாது. அந்த வகையில் சூர்யா அரசியல் களத்துக்கு வருவதற்கு மிகச் சரியான நபர், அவர் வரவேண்டும்" என்றெல்லாம் பேசி விஜய் அரசியலை தாக்கியிருந்தார் போஸ் வெங்கட்.
கடும் கண்டனங்கள்: இதையடுத்து, போஸ் வெங்கட்டின் ட்வீட்டுக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.. பின்னர், தான் பதிவிட்ட ட்வீட் குறித்து போஸ் வெங்கட் விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.
அதில், "அவர் கட்சி ஆரம்பித்தார். நான் கொள்கை என்ன என கேட்கிறேன். நீட் தேர்வு எதிர்ப்பு என்கிறார். அண்ணாதுரையும் பெரியாரும் தலைவர்கள் என்கிறார். சாவர்க்கரை பிடிக்குமா? பிடிக்காதா? என்றால், நிச்சயம் பிடிக்காது என்கிறார். பாஜகவை ஆதரிப்பீர்களா? என்றால், வாய்ப்பே இல்லை என்கிறார். சனாதனத்தை ஆதரிக்கிறீர்களா? என்றால், இல்லவே இல்லை என்கிறார்.
விஜய் அரசியல்: இதை அனைத்தையும் தான் திமுக செய்து வருகிறதே? அப்புறம் ஏன் விஜய் வருகிறார்? அவரிடம் ஒரு தனித்துவமான கொள்கை இருக்கவேண்டுமா? வேண்டாமா? உடனே முதல்வராகிவிட முடியுமா? வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும்.
விஜய் பக்கம் யார் போவார்கள்? சந்திரபாபு நாயுடு மாதிரி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனத் துடிப்பவர்கள் போவார்கள். அவர் பவன் கல்யாண், பாஜக என எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். திமுகவுக்கு அப்படி அவசியமும் இல்லையே.. பாஜக எதிர்ப்பு என்பதிலும் திராவிடக் கொள்கை என்பதிலும் உறுதியாக இருக்கிறது.
பொறாமையா? எனக்கா?: எனவே விஜய் அரசியலுக்கு வந்ததால் எங்களுக்கு ஒரு பொறாமையும் இல்லை. தன்னுடைய மாநாட்டுக்கு சொந்த பணம் 20 கோடி செலவு செய்ததாக சொல்கிறார்கள். யார் இப்படி சொந்த பணத்தைப் போடுவார்கள்? அதனால் அவர் மீது எனக்கு ஒரு பொறாமையும் கிடையாது. எனக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டும். பொது மக்களில் ஒருவனாக கேட்கிறேன்" என்று கூறியிருந்தார்.
அதில், "விஜய் பேச்சை பலமுறைக் கேட்டபிறகுதான் நான் அப்படி ட்வீட் பண்ணினேன். ஆனால் அதன் பிறகு ரோட்டில் போனால் சின்ன பையன் கூட முறைக்கிறான். அவன் விஜய் ரசிகன்தான் என்பது தெரிகிறது. நானும் விஜய் ரசிகன்தான். அவர் படத்தை முதல் நாளேப் பார்ப்பேன். ஆனால் அரசியல் என்பது வேறு. நான் அரசியல் களத்தில் அவரை எதிர்த்துப் பேசினேன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மீண்டும் விளக்கம்: இந்நிலையில், விஜய் குறித்து மீண்டும் போஸ் வெங்கட் பேசியிருக்கிறார்.. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "விஜய் பேச்சைப் பலமுறைக் கேட்டபிறகுதான் நான் அப்படி ட்வீட் பண்ணினேன். நான் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சின்ன பையன் என்னை பார்த்து முறைத்தான்.
அநேகமாக அந்த இளைஞர் விஜய் ரசிகனாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன், வெகு நேரமாக என்னையே அந்த இளைஞன் முறைத்துக்கொண்டே இருந்ததை கவனித்தேன். உடனே நான் அருகில் சென்றேன், நீங்கள் விஜய் ரசிகரா? என்று கேட்டதுமே என்னை பார்த்து சிரித்து விட்டார்.
திமுகவை விமர்சிப்பதா: நான் மற்றவர்களைவிட விஜய்க்கு மிகப்பெரிய ரசிகன்... அவருடைய படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க எப்பவுமே தவறியதில்லை. ஆனால் அரசியல் களம் என்பது வேறு, 70 ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை கொடுத்த ஒரு விஷயம் தான் திராவிடம். அதுதான் திராவிட முன்னேற்ற கழகம்.. அதைப் பற்றிய விமர்சனம் வைப்பது மிகவும் தவறு.
தனி நபரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அது அவரவருடைய விருப்பம், ஆனால் ஒரு மிகப்பெரிய ஆற்றலை குறை சொல்வது தவறு. ஆகவே எனக்கும் விஜய்க்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. ஆனால் எப்பொழுதுமே அவரை ஒரு நடிகனாக நான் ரசித்துக்கொண்டே தான் இருப்பேன்" என்று கூறி இருக்கிறார்.
-
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி!












Click it and Unblock the Notifications