விஜய், அஜித் மோசமான நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.. அப்படி புலம்பும் காலம் வரும்.. போஸ் வெங்கட் எமோஷனல்
சென்னை: சீரியல் மூலம் பிரபலமடைந்த போஸ் வெங்கட் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்துவரும் நிலையில் இயக்குனராகவும் ஒரு சில திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் அஜித் குறித்து கடுமையாக விமர்சித்து போஸ் வெங்கட் பேசி இருக்கிறார்.

அதோடு சின்ன திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களின் கஷ்டங்கள் குறித்தும் பெரிய திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் நடிகர்கள் குறித்தும் தன்னுடைய சில வருத்தங்களை போஸ் வெங்கட் பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இந்த நிலைமைக்கு காரணம் விஜய் மற்றும் அஜித் தான் என்று மனவேதனையில் நடிகர் போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் போஸ் வெங்கட் திரைப்பட இயக்குனராகவும், திமுக தலைமை கழக பேச்சாளராகவும் இருந்து வரும் நிலையில் இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்கு நுழைந்து தற்போது வரை பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு போஸ் வெங்கட் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கேரக்டர் மூலம் இவர் மக்கள்
மத்தியில் பிரபலமாகியதால் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும் இவருக்கு இந்த சீரியல் மூலமாகத்தான் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார். அந்த திரைப்படத்தில் கதையானது போஸ் வெங்கட் ஆரம்ப காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோது அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட சம்பவங்கள் பற்றி தான் இருந்தது.
அதைத்தொடர்ந்து போஸ் வெங்கட் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் தற்போது தமிழ் சினிமா மோசமான நிலைமையில் இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தால் சினிமா பெரிய சாதனை படைத்ததாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா அதனால்தான் இறந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா நம் கையில் இல்லை. வெளியாட்கள் கையில் தான் இருக்கிறது.
பணம் சம்பாதிக்க பல நிறுவனங்கள் அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கிறார்கள். இவர்களுடைய படங்கள் தான் ஆயிரம் தியேட்டர்களில் நான்கு காட்சிகளாக ஓடுகிறது. இவர்களுடைய படம் வெளியாகும் போது வேறு எந்த நடிகர்களுடைய படமும் வெளியிடக்கூடாது. அப்படியே வந்தாலும் யாரும் கண்டு கொள்ளக்கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவர்களை தாண்டி படம் இல்லை. தமிழ் சினிமா தன் அடையாளத்தை இழந்து கொண்டு இருக்கிறது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. எதிர்காலத்தில் ஓடிடிட்டியில் யார் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் காலம் வந்துவிடும். அப்போது மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஒரு நடிகர் வருவார்.
அப்போது விஜய்யும் அஜித்தும் சாதாரணமாக நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளுவார்கள். அவர்கள் புலம்பும் காலம் விரைவில் வரும். அவர்கள் மாறிய பிறகு தான் தமிழ் சினிமா நிலை மாறும். எல்லா படங்களும் வெளியானால் தான் ஆரோக்கியமான சூழல் உருவாகும் என்று அந்த பேட்டியில் போஸ் வெங்கட் பேசி இருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications